மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 நவ 2019

டெஸ்ட் கிரிக்கெட் : முதலிடத்தில் இந்தியா

டெஸ்ட் கிரிக்கெட் : முதலிடத்தில் இந்தியா

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற வங்காளதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இன்று (நவம்பர் 24) வென்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது .

இந்தியா வங்காளதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட்போட்டி முதன்முறையாக பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. பிங்க் நிற பந்து உபயோகப்படுத்தி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் சதம் ( 136 ரன்கள் ), மற்றும் இஷாந்த் ஷர்மா 5 / 22 , 4/56, உமேஷ் யாதவ்வின் 3 / 29 , 5 / 53 அபார பந்து வீச்சின் மூலம் இந்தியா இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று 2 - ௦ கணக்கில் தொடரை வென்றது.வங்காள தேசம் சார்பில் முசிபுர் ரஹிம் மட்டும் 79 ரன்கள் எடுத்தார் .

இந்திய அணி ,மேற்கிந்திய தீவுகள் அணியை 2 - ௦ கணக்கிலும் , தென் ஆப்ரிக்கா அணியை 3 - ௦ கணக்கிலும் வென்று மூன்றாவது தொடர் வெற்றியாக வங்காள தேசத்தை 2 - ௦ வென்றுள்ளது . இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் உலக அணிகளுக்குள் 360 புள்ளிகள் பெற்று .முதலிடத்தில் உள்ளது. 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்தில் உள்ளது .

அதிக புள்ளிகள் பெறும் முதலிரண்டு அணிகளுக்கிடையில் உலக டெஸ்ட் சாம்பியனுக்கான இறுதிப்போட்டி 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 24 நவ 2019