மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 நவ 2019

அரசியலுக்கு வர ஒருபோதும் விரும்பியதில்லை: பிரதமர்

அரசியலுக்கு வர  ஒருபோதும் விரும்பியதில்லை: பிரதமர்

அரசியலுக்கு வர வேண்டும் என ஒருபோதும் விரும்பியதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலி வழியாக “மன் கி பாத்”(மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார். அந்த வகையில் தேசிய மாணவர் படை தினமான இன்று (நவம்பர் 24) ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை உறுப்பினர்களுடன் மோடி கலந்துரையாடினார். அவர்களிடம், பள்ளிக் காலங்களில் தானும் மாணவர் படையில் இருந்ததாகவும், ஆனால், ஒழுக்கமாக இருந்ததால் ஒருமுறை கூட தண்டிக்கப்பட்டதே இல்லை என்றும் குறிப்பிட்டார்.

அப்போது, ஒரு மாணவர் எழுந்து, “நீங்கள் அரசியல்வாதி ஆகாமல் இருந்திருந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பிரதமர், ‘இது கடினமான கேள்வி’ எனக் கூறிவிட்டு, “ஒவ்வொரு குழந்தையும் வாழ்க்கையில் பல கட்டங்களை கடந்து செல்கிறது. சில நேரங்களில் ஒருவர் தான் இப்படி ஆக வேண்டும் என்று விரும்புவார். வேறோரு தருணத்தில் வேறு மாதிரி ஆக வேண்டும் என்று நினைப்பார். ஆனால், உண்மை என்னவென்றால் அரசியலில் நுழைய எனக்கு ஒருபோதும் விருப்பம் இருந்ததில்லை. நான் அதைப்பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை. எனினும், இப்போது இந்திய அரசியலில் நான் ஒரு முக்கியமான நபராக இருப்பதால் நாட்டின் நலனுக்காக நான் எவ்வாறு பணியாற்ற முடியும் என்றுதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

மேலும், “அரசியலுக்கு வரவில்லை என்றால் நான் என்ன செய்திருப்பேன் என்ற எண்ணமே எனக்கு வந்ததில்லை. நான் எங்கு இருந்தாலும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, நாட்டின் நலனுக்காக அயராது உழைத்துக் கொண்டிருந்திருப்பேன்” என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, அயோத்தி தீர்ப்பு நீதித் துறையின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும், அது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்றும் குறிப்பிட்ட பிரதமர், “நமது நாட்டுக்குப் பல முகங்கள் பல மொழிகள் இருந்தாலும் அனைத்து மக்களின் சிந்தனையும் ஒன்றே” என்று பாரதியாரின் முப்பது கோடி முகமுடையாள் கவிதையை மேற்கொள் காட்டி பேசினார்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 24 நவ 2019