மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 நவ 2019

காலையில் 11 பேர், மாலையில் 5 பேர்: தனித்துவிடப் படுகிறாரா அஜித் பவார்?

காலையில் 11 பேர், மாலையில் 5 பேர்:  தனித்துவிடப் படுகிறாரா அஜித் பவார்?

மகாராஷ்டிர அரசியலில் மட்டுமல்ல இந்தியாவையே அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் இன்று (நவம்பர் 23) காலை 8 மணிக்கு பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்க, துணை முதல்வராகப் பதவியேற்றார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அஜித் பவார்.

இன்று காலை அஜித் பவாரோடு ஆளுநர் மாளிகை சென்ற எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் என்று தெரியவருகிறது. அவர்களில் மூவரை சரத் பவார் இன்று மதியம் சவான் மையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

டவுலத் தரோடா, நர்ஹரி சிர்வார், சுனில் புசாரா, திலிப் பங்க்கர், அனில் படியாஸ் பாட்டில், நிதின் பவார், சுனில் ஷெல்கே, பாபாசாஹிப் பாட்டில், சஞ்சய் பன்சன் ஆகிய அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் சிலர், “எங்கள் சட்டமன்றத் தலைவர் அஜித் பவார் அழைத்ததால் சென்றோம். எங்களிடம் வேறு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை” என்று கூறினார்கள்.

துணை முதல்வராக பதவியேற்றது முதல் பத்திரிகையாளர்களை சந்திக்காத அஜித் பவார் இன்று பிற்பகல் மும்பையில் உள்ள தனது சகோதரர் ஸ்ரீனிவாஸ் பவாரின் வீட்டில் தனது ஆதரவாளர்களை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், முன்னதாக அறிவித்தபடி இன்று (நவம்பர் 23) மாலை சவான் மையத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டினார். இதில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டமன்றக் குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்தார் சரத்பவார். அதன்படியே இன்று மாலை 6 மணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது.

சுமார் 11 எம்.எல்.ஏக்கள் மற்றும் அஜித் ஆகியோர் பாஜகவுடன் கைகோர்த்திருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் சரத் பவார் கூட்டியிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு மொத்தமுள்ள 54 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 6 பேர்தான் வரவில்லை என்று தகவல்கள் கிடைக்கின்றன.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

சனி 23 நவ 2019