மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 நவ 2019

இலங்கை: தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர்!

இலங்கை: தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர்!

இலங்கையிலுள்ள தமிழர்கள் வாழும் பகுதி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் துப்பாக்கி ஏந்திர ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் கோத்தபய ராஜபக்‌ஷே கடந்த 19ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அதன்பிறகு உரையாற்றிய கோத்தபய, “சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டுமே நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதமராக கோத்தபய ராஜபக்‌ஷேவின் சகோதரரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்‌ஷே பதவியேற்றார்.

இந்த நிலையில் இலங்கையில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையாக கோத்தபய ராஜபக்ஷே

புதிய அவசரச் சட்டம் ஒன்றை நேற்று (நவம்பர் 22) பிறப்பித்துள்ளார். அதன்படி, ஈழத்தமிழர்கள் வாழும் பகுதி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவர். இந்த அவசர சட்டம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. நவம்பர் 27ஆம் தேதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், இலங்கையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழகத்திலிருந்து கண்டனக் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “கோத்தபய ராஜபக்‌ஷே பதவி ஏற்றபின்பு, முதல் வேலையாக, வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழர் வாழும் பகுதிகளில், ஆயுதந் தாங்கிய இராணுவத்தினர், தெருக்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்.

தமிழ் இனத்தைக் கூண்டோடு கரு அறுப்பதே கோத்தபய இராஜபக்சேயின் குறிக்கோள் ஆகும். எட்டுக்கோடித் தமிழர்கள் இந்திய நாட்டின் குடிமக்கள் ஆக இருக்கின்றோம். எங்களது தொப்புள் கொடி உறவுகள் ஆகிய ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கின்றது. இலங்கை அரசின் அடக்குமுறைகளில் இருந்து ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

சனி 23 நவ 2019