மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 நவ 2019

ராமதாஸ், சீனிவாசனுக்கு திமுக கெடு!

ராமதாஸ், சீனிவாசனுக்கு திமுக கெடு!

முரசொலி விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் ஆகியோருக்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டிய நிலையில், அந்த விவகாரம் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார்.

இதுதொடர்பான விசாரணை சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. அதில், முரசொலி நிர்வாகம் சார்பாக ஆவணங்களுடன் ஆஜரான அதன் அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி, ‘இந்த விவகாரத்தை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை’ எனத் தெரிவித்திருந்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, “முரசொலி நிலம் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் ஆணையத்துக்கு நாங்கள் வந்தோம். புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை. தலைமைச் செயலாளரும், புகார் அளித்தவரும் வாய்தா வாங்கியுள்ளனர். பொய்ப்புகார் அளித்தவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் முரசொலி விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஆர்.எஸ்.பாரதி நேற்று (நவம்பர் 22) நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், “ராமதாஸ், முரசொலி இடம் குறித்து, தான் பதிவிட்ட டிவிட்டர் பதிவுகளை, நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்தில் நீக்கிவிடவேண்டும் என்றும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும், வருங்காலத்தில் இது போன்ற அவதூறான பதிவுகளைப் பதிவிடக்கூடாது என்றும் நோட்டீஸில் கோரப்பட்டுள்ளது, தவறும் பட்சத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பாக ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்களால் ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் மீது வழக்கு தொடுக்கப்படும். அவதூறு குற்றத்திற்காக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசனுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.பாரதி சார்பாக வழக்கறிஞர் நீலகண்டன் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

சனி 23 நவ 2019