மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 நவ 2019

விவசாயிகள் போல் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

விவசாயிகள் போல் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகள் போல் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாறு குறித்த "நேர்மையின் பயணம்" என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புத்தகத்தை வெளியிட்டார். கேரளாவின் முன்னாள் ஆளுநர் சதாசிவம் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய நிர்மலா சீதாராமன், விவசாயிகள் போல் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மழை இல்லாமல், விளைச்சல் இல்லாமல் நட்டத்தை அடைந்தாலும் ஒவ்வொரு விளைச்சலையும் விவசாயிகள் விடாமுயற்சியுடன் மேற்கொள்வார்கள். இதனால் தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் போது நமக்கு மிகுந்த மனவேதனை ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.

விவசாய குடும்பத்தில் பிறந்ததால் தான் பாலகுருசாமி தனது வாழ்நாளில் நேர்மையை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார். அவரது முயற்சியினால் தான் அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்தைப் பெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

சனி 23 நவ 2019