மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 நவ 2019

2019ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை!

2019ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை!

2019ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக "காலநிலை எமர்ஜன்சி" உள்ளது என ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றங்கள் தொடர்பான எச்சரிக்கைகளும், ஆய்வுகளும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. காலநிலை மாற்றம் தொடர்பான விவாதங்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஐநா சபை முதல் ஒவ்வொரு நாடுகளின் பாராளுமன்ற அவைகளிலும் காலநிலை மாற்ற எச்சரிக்கை தொடர்பான பேச்சுக்கள் எழுந்து கொண்டே தான் உள்ளன. பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அண்மையில் அறிவித்ததும், காலநிலை மாற்றத்தை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடத்தியதும் உலகம் முழுக்க கவனம் பெற்றது.

டென்மார்க்கில் நடந்த காலநிலை மாற்ற தடுப்பு மாநாட்டில் பங்கேற்க செல்ல டெல்லி முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்தியாவிலும் அது தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் ஜி20 மாநாடு உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு சுற்றுப் பயணங்களிலும் பிரதமர் மோடி காலநிலை மாற்ற தடுப்பின் அவசியம் குறித்து உரையாற்றினார். இவ்வாறு இந்த ஆண்டு முழுவதுமே பேசுபொருளாக காலநிலை மாற்றம் உள்ளது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக ’காலநிலை எமர்ஜென்சி’ உள்ளதாக ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் காலநிலை எமர்ஜென்சி என்ற வார்த்தையின் பயன்பாடு 10,796 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பொதுவாக எமர்ஜென்சி என்ற வார்த்தையுடன் ஹெல்த் எமர்ஜென்சி என்ற வார்த்தைதான் அதிகம் பயன்படுத்தப்படும். ஆனால் அதைவிட 3 மடங்கு அதிகமான அளவில் காலநிலை எமர்ஜென்சி என்ற வார்த்தை இந்த ஆண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தைக் குறைக்க அல்லது நிறுத்த அவசர நடவடிக்கை தேவைப்படும் என்று இந்த வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி அர்த்தம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் எச்சரிக்கையை உணர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையே இது உணர்த்துகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஸ்காட்லாந்திலும், மே மாதத்தில் கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியாவிலும் காலநிலை எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டது.

2018ம் ஆண்டில் ‘டாக்சிக்' என்ற வார்த்தையும், 2017ஆம் ஆண்டில் ‘யூத் குவாக்' என்ற வார்த்தையும் அந்த ஆண்டின் மிகச்சிறந்த வார்த்தைகளாக ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

சனி 23 நவ 2019