மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 நவ 2019

விபத்து நடந்த இடத்தில் கொடிக்கம்பமே இல்லையாம்!

விபத்து நடந்த இடத்தில் கொடிக்கம்பமே இல்லையாம்!

கோவையில் அதிமுக கொடிக்கம்பத்தால் விபத்து ஏற்பட்டுப் படுகாயமடைந்த அனுராதா என்ற இளம்பெண்ணுக்கு இடதுகால் அகற்றப்பட்டது. ஆனால் விபத்து நடந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பமே இல்லை என்று தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்காநல்லூரைச் சேர்ந்த அனுராதா எனும் ராஜேஸ்வரி கடந்த 11ஆம் தேதி காலை ஸ்கூட்டரில் பணிக்குச் சென்றபோது, கோவை பீளமேடு பகுதியில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார். ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இடது கால் அகற்றப்பட்டது.

சென்னையில் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, விபத்தால் கால்களை இழந்த அனுராதாவுக்கு இழப்பீடு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரு வழக்குகளும் நேற்று (நவம்பர் 22)விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண் கோவையில் நடந்த அந்த சம்பவத்தின் நிகழ்விடத்தில் எந்த கொடிக்கம்பமும் இல்லை என விசாரணையில் தெரியவந்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

சனி 23 நவ 2019