ஆலங்கட்டி மழை போல் பணமழை: கொல்கத்தாவில் சுவாரஸ்யம்!

public

கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க.. ஆனால் இங்கு மாடியிலிருந்து கொட்டியுள்ளது.

கொல்கத்தாவில், நேற்று மாலை அலுவலக வளாகம் ஒன்றின் ஆறாவது மாடியில் இருந்து, பணமழை பெய்ததால் அவ்வழியே சென்றவர்கள், ரூபாய் நோட்டுகளைப் போட்டிப் போட்டுக்கொண்டு அள்ளி சென்றுள்ளனர்.

மத்திய கொல்கத்தாவின், பெண்டிக் தெருவில் உள்ள வணிக கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து ரூ.2000, ரூ.500, ரூ.100 நோட்டுகள் கட்டுக் கட்டாக வீசப்பட்டுள்ளன. இதனைக் கண்ட அப்பகுதி குடியிருப்பு மக்கள், கடைக்காரர்கள் மற்றும் அவ்வழியே சென்ற பயணிகள் பணத்தை அள்ளும் கவனத்திலிருந்துள்ளனர். இதுகுறித்த தகவல் பரவவே மேலும் பலர் அப்பகுதிக்குத் திரண்டுள்ளனர்.

ஏன் அங்குப் பண மழை பொழிகிறது என பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.. இதனைச் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிடத் தொடங்கினர். பின்னர்தான் பணமழை பொழிந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

அந்த வணிக கட்டிடத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனைத்தொடர்ந்தே அங்கிருந்த ஊழியர்கள் பணத்தை ஜன்னல் வழியே வீசியுள்ளனர். இரவு வரை இந்த சோதனை நீடித்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரக வட்டாரங்கள் ஐஏஎன்எஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளன.

”இந்த திடீர் தேடுதல் வேட்டை என்பது சில ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் தொடர்புடையதாக இருக்கலாம். இது ஆவணங்களுக்கான தேடல் நடவடிக்கையாகும். இது கணினிகளில் சேமிக்கப்பட்ட சில தகவல்களாக இருக்கலாம் ஆனால் இதுகுறித்து வேறு எதுவும் சொல்ல முடியாது. இந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்ட அலுவலகத்தின் பெயரையும் நாங்கள் வெளியிட முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளன. சாலையில் பணம் வீசப்பட்டது குறித்துக் கேட்டதற்கு, அதைப் பற்றியும் விவரமாகத் தெரிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளன.

டி.ஆர்.ஐ.யின் , கொல்கத்தா மண்டல பிரிவின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் தீபங்கர் ஆரோனின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது ரூ.4 லட்சம் வரையிலான பணம் மேலிருந்து கீழே வீசப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *