o‘இப்ப வந்து மோதுடா’:சூர்யாவின் மாறா ராப்!

public

சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சூர்யா பாடியுள்ள ‘மாறா’ என்னும் ராப் பாடலின் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப்படத்தில் பைலட் ஆஃபீசர் நெடுமாறன் ராஜாங்கம் என்னும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்தநிலையில் படத்தில் இடம்பெறும் ‘மாறா’ என்னும் பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து, ராப் பாடல் வகையில் உருவாகியுள்ள இந்தப்பாடலை சூர்யாவே பாடியுள்ளார் என்பது தான் இதன் சிறப்பு அம்சம்.

ஜி.வி.பிரகாஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில்,

**இப்ப வந்து மோதுடா**

**கிட்ட வந்து பாருடா**

**கட்டறுந்த காளை நெஞ்சு மேல ஏறப் போகுதுடா**

என்னும் பாடல் வரிகளை சூர்யா பாடுவது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ஏற்கனவே அஞ்சான் படத்தில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து ‘ஏக் தோ தீன்’ பாடலைப் பாடிய சூர்யா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சூரரைப் போற்று திரைப்படத்தில் மீண்டும் பாடியுள்ளார்.

அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில், மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *