மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 நவ 2019

உள்ளாட்சித் தேர்தல்: பொங்கலுக்கு முன்பா, பின்பா?

உள்ளாட்சித் தேர்தல்:   பொங்கலுக்கு முன்பா, பின்பா?

“உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பணிகளைத் தொடங்கிவிட்டீர்களே?” என்ற செய்தியாளரின் கேள்விக்கு.

“உள்ளாட்சித் தேர்தல் என்பது ஆயிரக்கணக்கான பேர் போட்டியிடக் கூடிய தேர்தல், சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலைப் போல அல்ல, அதனாலதான் நாங்கள் தேர்தல் பணிகளை முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டோம். தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையான அமைப்பு. தேர்தல் தேதி என்ன என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள்” என்றார் சிரித்துக் கொண்டே முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

வரும் டிசம்பர் கடைசியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக, திமுக இரு தரப்பிலும் நிலவும் நிலையில் உள்ளாட்சித் தேர்தல் பொங்கலுக்கு முன்பா, பின்பா என்ற ஒரு புதிய கேள்வி அதிமுகவுக்குள் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் பேசினோம்.

“அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி தலைமைக் கழகத்தில் நடந்தபோது நன்றியுரை ஆற்றிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ‘எனது தனிப்பட்ட கருத்தாக ஒன்றைச் சொல்கிறேன். உள்ளாட்சித் தேர்தலை இப்போது நடத்தினால் நிறைய பிரச்சினைகள் இருக்கு. அதனால் தேர்தலை ஒத்தி வைக்கலாம் என்பது எனது கருத்து’ என்று கூறினார். அவருக்குப் பிறகு யாரும் பேச வாய்ப்பு இல்லாததால், வைத்திலிங்கத்தின் கருத்து முடிவு காணப்படாத விவாதமாக தொடர்கிறது.

அதேநேரம் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வுப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு ஐடியாவை முன் வைத்திருக்கிறார். அதாவது இடைத்தேர்தல் போன்ற பணப்புழக்கம் உள்ளாட்சித் தேர்தலிலும் இருக்கும் என்று பலரும் கருதத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் இடைத்தேர்தலுக்கு செலவு செய்வது போலெல்லாம் உள்ளாட்சித் தேர்தலுக்கு செலவு செய்ய முடியாது. விரைவில் சட்டமன்றத் தேர்தல் வேறு வந்துகொண்டே இருக்கிறது.

எனவே வரும் பொங்கல் பண்டிகைக்கு மதவேறுபாடில்லாமல் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பணம் இரண்டாயிரம் ரூபாய் தமிழக அரசு சார்பில் கொடுப்போம். இப்போதே வேட்பாளர்களை எல்லாம் தேர்வு செய்து வைத்துக் கொள்வோம். பொங்கல் பணத்தை ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை அதிமுக வேட்பாளர்களுக்குக் கொடுத்துவிடலாம். அப்படிக் கொடுத்து முடித்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தால் மழையும் இல்லாமல் இருக்கும், மக்களின் மனதைத் திருப்திப்படுத்திவிட்டு தேர்தலை சந்தித்த மாதிரியும் இருக்கும் என்பதுதான் வேலுமணி தரப்பில் வைக்கப்பட்டுள்ள யோசனை.

ஆனால் முதல்வரோ எவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடத்திவிடலாம் என்ற முடிவில் இருக்கிறார். பொங்கலுக்குள் தேர்தலை நடத்திமுடித்து பொங்கலின்போது அதிமுக நிர்வாகிகள் பலரும் பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் விருப்பம். எனவே உள்ளாட்சித் தேர்தல் பொங்கலுக்கு முன்பே வரலாம். பொங்கல் பணத்தை அடிப்படையாகக் கொண்டு முதல்வரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டால் பொங்கலுக்குப் பிறகுதான் உள்ளாட்சித் தேர்தல்” என்கிறார்கள் அதிமுகவின் சீனியர்கள்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

வியாழன் 14 நவ 2019