மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

மோகன் பகவத் கான்வாய் மோதி சிறுவன் பலி!

மோகன் பகவத் கான்வாய் மோதி சிறுவன் பலி!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்-தின் கான்வாயில் சென்ற கார் மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்துவிட்டான், அவனது தாத்தா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று (செப்டம்பர் 11) மோகன் பகவத் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அல்வார் மாவட்டத்திலுள்ள டிஜாரா பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மோகன் பகவத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோகன் பகவத் வந்த காருக்கு முன்னும் பின்னும் எட்டு முதல் பத்து கார்கள் அணிவகுத்து வந்துகொண்டிருந்தன.

அந்த கார்களில் ஒன்று சாலையில் போய்க் கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளின் மீது இடித்ததில் அதில் தன் தாத்தாவுடன் பயணம் செய்துகொண்டிருந்த சச்சின் என்ற சிறுவன் அங்கேயே உயிரிழ்ந்துவிட்டான். சச்சினின் தாத்தா காயங்களோடு சிகிச்சை பெற்று வருகிறார் என்று சம்பவம் நடந்த பகுதியை உள்ளடக்கிய மண்டவார் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராம்ஸ்வரூப் பைரவா தெரிவித்திருக்கிறார்.

அந்த டூவீலரை இடித்துத் தள்ளிவிட்ட நிலையிலும் மோகன் பகவத்தின் கான்வாயில் வந்த கார், பெஹ்ரரை நோக்கி சென்றுவிட்டது. காரை இன்னும் கைப்பற்றவில்லை என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர். காரின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு அந்த காரின் டிரைவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 12 செப் 2019