மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

ஜாமீன் கேட்கும் சிதம்பரம்: இன்று விசாரணை!

ஜாமீன் கேட்கும் சிதம்பரம்: இன்று விசாரணை!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு, கடந்த 5ஆம் தேதி சிபிஐ காவல் முடிந்தது. இதனையடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். திகார் சிறைக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அமலாக்கத் துறை காவலுக்குச் செல்ல தயாராக இருப்பதாக சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை நிராகரித்த நீதிபதி, சிதம்பரத்தை வரும் செப்டம்பர் 19ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்துக்கு வரும் 16ஆம் தேதி 75ஆவது பிறந்தநாள்.

இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை நேற்று (செப்டம்பர் 11) நாடினார் சிதம்பரம். அவரின் மனுவில், “ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நான் கைது செய்யப்பட்டதும், நீதிமன்றக் காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டதும் சட்டவிரோதமானது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வேறு எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஏற்கனவே இதுதொடர்பாக நேரில் ஆஜராகி பலமுறை விளக்கம் அளித்துள்ளேன். எனவே என்னை கைது செய்வதற்கான காரணம் எதுவுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 12 செப் 2019