மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

பொங்கல் ரயில் டிக்கெட்: இன்று முன்பதிவு!

பொங்கல் ரயில் டிக்கெட்: இன்று முன்பதிவு!

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட்டுகளை இன்று (செப்டம்பர் 12) முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

வருகிற ஜனவரி மாதம் 15ஆம் தேதியன்று பொங்கல் பண்டிகை தொடங்குகிறது. போகி, பொங்கல், , மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என ஜனவரி 18ஆம் தேதி வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. வார நாட்களில் பொங்கல் விடுமுறை நிலையில் அதற்கு முன்னும் பின்னும் சனி ஞாயிறான வார இறுதி விடுமுறை நாட்கள் வருவதால் ஒரு வாரத்திற்கும் மேலாக விடுமுறை வரவுள்ளது, இதனை முன்னிட்டு சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊருக்குச் செல்வார்கள். அவர்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது என்று ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 10ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 12ஆம் தேதியும், 11ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 13ஆம் தேதி, ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 14ஆம் தேதியும், ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 15ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 16ஆம் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் திரும்புவோருக்கு ஜனவரி 19ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 21ஆம் தேதியும், ஜனவரி 20ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 22ஆம் தேதியும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 12 செப் 2019