மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

மே.வங்கத்தில் மோட்டார் வாகனச் சட்டம் அமல் இல்லை!

மே.வங்கத்தில் மோட்டார் வாகனச் சட்டம் அமல் இல்லை!

புதிய மோட்டார் வாகனச் சட்டம் ஏழை மக்களை வதைப்பதாக இருப்பதால் மேற்கு வங்கத்தில் அமல் இல்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது. அதிலிருந்து, சாலை விதிகளை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த லாரி உரிமையாளர் அதிகபட்சமாக ரூ.1,41,000 அபராதம் கட்டியுள்ளார்.

இதனால் காரில் சென்றாலும் ஹெல்மெட் அணிவது, ஹெல்மெட்டைச் சுற்றி தேவையான ஆவணங்களை ஒட்டிக்கொள்வது போன்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன. கடந்த வாரம் ஒடிசாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரூ.70,000 அபராதம் செலுத்தியிருந்தார்.

விதி மீறலுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று (செப்டம்பர் 11) கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இது நிறைவேற்றப்பட்ட அன்றே எங்கள் கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மக்களை வதைக்கும் இத்தகைய சட்டங்களை ஒருதலைபட்சமாக எடுக்கக் கூடாது. இப்போது விதிமீறல் என்றால் ரூ.500 அபராதத்துக்குப் பதிலாக ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. ஏழை மக்களும் சிக்குகின்றனர். இத்தனை பணத்துக்கு அவர்கள் எங்கு செல்வார்கள்?” என மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேலும் மம்தா பானர்ஜி கூறுகையில், “சமீபமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் படுத்தப்பட மாட்டாது. ஏனெனில் அபராதத் தொகைகள் கடுமையாக இருக்கின்றன. நாங்கள் ஏற்கெனவே உருவாக்கிய ‘பாதுகாப்பான பயணம் பாதுகாப்பான வாழ்க்கை’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தையே இன்னும் தீவிரப்படுத்துவோம்.

ஆகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது மனிதாபிமான அடிப்படையில் காண வேண்டும். இது மக்கள் மீது அதிக சுமையைச் செலுத்துவதாகும்”என்றார்.

மத்திய அரசின் புதிய சட்டத்தை நிராகரித்த மூன்றாவது மாநிலம் மேற்கு வங்கமாகும். பாஜக ஆளும் மாநிலமான குஜராத் நேற்று முன்தினம் (செப்டம்பர் 10) மோட்டார் வாகன சட்டத்தில் கடுமையான தண்டனைகளையும், அபராத தொகைகளையும் குறைத்துள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 12 செப் 2019