மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

பாஜக அமைச்சரை ரகசியமாக சந்தித்த ஸ்டாலின் ஆலோசகர்!

பாஜக அமைச்சரை ரகசியமாக சந்தித்த ஸ்டாலின் ஆலோசகர்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சி ரீதியாகவும், அவருடைய தனிப்பட்ட ஆளுமை மேம்பாட்டுக்காகவும் ஆலோசனைகள் வழங்கும் முக்கிய ஆளுமையாக இருப்பவர் சுனில்.

கொளத்தூர் தொகுதிப் பிரச்சினையில் ஆரம்பித்து தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் நிலவும் திமுக உட்கட்சிப் பிரச்சினைகளை ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லுதல், அவற்றுக்கு தீர்வுகளை பரிந்துரைத்தல், தேசிய அளவில் திமுகவின் செயல் திட்டங்கள் போன்றவற்றில் சுனிலின் பங்கு பெரிது என்பது கட்சியிலேயே பலருக்கும் தெரியும்.

குறிப்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து மாறி வேறு தொகுதியில் நிற்கலாம் என்று ஸ்டாலின் முடிவெடுத்தபோது கொளத்தூர், அண்ணா நகர் ஆகிய இரு தொகுதிகளையும் பல கட்ட ஆய்வுக்குப் பிறகு ஸ்டாலினுக்குப் பரிந்துரைத்தவர் சுனில்தான். அதிலும் அண்ணா நகரை விட கொளத்தூரே ஸ்டாலினுக்கு மிக சாதகமாக இருக்கும் என்றும், அத்தொகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் ஸ்டாலினுக்கு கிடைக்கும் வாக்கு விவரங்கள் என்றும் சில புள்ளி விவரங்களை சுனில் அளித்திருக்கிறார். அதன்படியே ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நின்றபோது சுனில் சொன்ன கணக்கின்படியே வாக்குகள் விழுந்ததை அடுத்து சுனில் மீதான ஸ்டாலினின் நம்பிக்கை அதிகரித்தது.

அண்மையில் நடந்த மக்களவைப் பொதுத் தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் அழைப்பின் பேரில் கொல்கத்தா சென்று தேர்தல் பேரணியில் கலந்துகொண்டபோது ஸ்டாலினுடன் சென்ற ஐந்து பேரில் சுனிலும் ஒருவர்.

இவ்வாறு திமுக தலைவரின் ஆலோசகராக இருக்கும் சுனில் அண்மையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார். நடந்து முடிந்த தேர்தலில் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்ட பியூஷ் கோயல் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைப்பதில் கடைசி வரை முழு முயற்சி மேற்கொண்டார். இதற்காக பல அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போதே திமுக தரப்புடனும் அதிகாரபூர்வமற்ற பேச்சுகளை பியூஷ் கோயல் நடத்தியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் உலவின. இந்தப் பின்னணியில் இன்னமும் தனது தமிழ்நாட்டு தொடர்புகள் மூலம், தமிழ்நாட்டு அரசியல் பற்றிய கவனிப்புகளை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார் கோயல். பாஜக தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் நட்டா ஆகியோருடன் அவ்வபோது பியூஷ் கோயல் தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி விளக்கிவருகிறார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 12 செப் 2019