மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

தோனி ஓய்வு: பற்ற வைத்த கோலி

தோனி ஓய்வு: பற்ற வைத்த கோலி

முன்னாள் இந்தியக் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று மாலை(செப்டம்பர் 12) ஏழு மணிக்கு தனது ஓய்வை அறிவிப்பார் என காலை முதல் வதந்திகள் பரவ இந்நாள் கேப்டன் விராட் கோலி பதிவிட்ட ஒரு டிவீட் காரணமாகியது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இன்று காலை 11 மணியளவில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2016ஆம் ஆண்டின் டி 20 ஆட்டத்தில் தோனியும் கோலியும் களத்தில் இருக்கும் புகைப்படத்தை இணைத்து, “என்னால் மறக்க முடியாத விளையாட்டு இது. இந்த மனிதன், என்னை உடற்பயிற்சி சோதனைக்கு ஓடுபவனைப் போல ஓடவைத்தார்” என பிரிவின் நிமித்தமாக பகிரும் மறக்க முடியாத நினைவுகளை வெளிப்படுவதைப் போல பதிவிட்டுள்ளார். அத்துடன் தோனியின் டிவிட்டர் கணக்கையும் ‘டேக்’கில் இணைந்திருந்தார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே செய்திகள் பல கிளைகள் முளைத்து கிளம்பத் தொடங்கின. விராட் கோலியின் இந்த டிவீட் பல்வேறு தீவிரமான ஊகங்களை, குறிப்பாக தோனியின் ஓய்வு குறித்த அறிவிப்பை தூண்டும் வகையில் இருந்தது. அதனால், இன்று மாலை 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் மகேந்திர சிங் தோனி, அனைத்து சர்வதேச போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவிக்கவுள்ளார் என காட்டுத் தீ போல வதந்திகள் பரவத் தொடங்கியது.

டிவிட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் இன்று இந்த ‘#Dhoni’ ஹேஷ்டேக் தான் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தோனி ஓய்வை அறிவிக்க வேண்டாம் ரசிகர்கள் உணர்வெழுச்சியுடன் தோனியின் புகைப்படங்களை, அவர் குறித்த நினைவுகளை, புகைப்படங்களை, மீம்ஸ்களை பகிர்ந்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

உச்சகட்டமாக தோனி தனது ஒய்வை அறிவிப்பதைப் போலவும், அதற்கு பிரதமர் மோடி மறுப்பதைப் போலவும் போலி கணக்கை உருவாக்கி இணையத்தை பதற வைக்கும் அளவுக்கு தோனிக்காக இறங்கியுள்ளனர் நெட்சன்கள். அந்த டிவீட் கிழே..

வதந்திகள் எல்லை மீறிச் சென்றதால், அதனைக் கட்டுப்படுத்த மாலை இந்திய கிரிகெட் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்,“தோனி ஓய்வு குறித்த செய்திகளில் உண்மையில்லை” என அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பு தான் இந்த வதந்திகள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் தொடங்கின.

இந்திய இராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் பணியாற்ற தோனி 2 மாதங்கள் ஓய்வு விடுப்பில் இருக்கின்றார். இதனிடையில், தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்த கேள்விகள், சர்ச்சைகள் அவ்வபோது வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ஏன் விராட் கோலி இந்த புகைப்படத்தையும், தோனி குறித்த பதிவையும் வெளியிட வேண்டும்? எனக் கேள்விகளும் எழுந்துள்ளது. தோனி தன்னுடைய ஓய்வை விரைந்து அறிவிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டும், விராட் கோலியும் விரும்புகிறார்களா? தோனிக்கு இதன் மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என பல்வேறு கேள்விகளும் விவாதங்களும் எழுந்து வருகின்றன.

எல்லாம் அந்த ஒரே ஒரு டிவீட்டில் பற்ற வைத்த கோலிக்கே வெளிச்சம்!

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 12 செப் 2019