மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

இதுக்கு பேரு தான் பியூஸ் போறதா? :அப்டேட் குமாரு

இதுக்கு பேரு தான் பியூஸ் போறதா? :அப்டேட் குமாரு

“இவனுவ சொல்ற பர்சண்டேஜ் கணக்கையெல்லாம் நம்பாதீக. கணக்கை வெச்சிக்கிட்டா அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை. ஐன்ஸ்டீன் புவியீர்ப்பு விசையை கண்டுபுடிக்க கணக்கு ஒதவுச்சா என்ன?” அப்டின்னு பியூஸ் கோயல் சொல்ல... (இந்த ஸ்லேங்ல அவர் பேசியிருக்கமாட்டாரு தான். இந்தி படத்தை டிரான்ஸ்லேட் பண்ணா, சென்னை ஸ்லேங்ல மட்டும் தான் பண்ணனுமா? நாங்க சவுத் தமிழ்நாட்டு லேங்குவேஜ்ல தான் பண்ணுவோம்)

விஷயத்துக்கு வருவோம். பியூஸ் கோயல் அப்படி சொல்ல, நம்ம நெட்டிசன்ஸ் எல்லாருமே நியூட்டன் கண்டுபிடிச்ச புவியீர்ப்பு விசையை ஐன்ஸ்டீன்னு மாத்தி சொல்லிட்டதா கலாய்க்கிறாங்க. ஒரு வகைல அவர் சொன்னது உண்மை தான். புவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணக்கு உதவலை. ஏன்னா, அவர் தான் புவியீர்ப்பு விசையவே கண்டுபிடிக்கலையே. ஒருவேளை அவர் ஒழுங்கா கணக்கு படிச்சிருந்தா கண்டுபிடிச்சிருப்பாரோ என்னவோ!

நிர்மலா சீதாராமன் ஓலா-உபெர் கால் டாக்சிகளை பத்தி பேசுனதை வெச்சு கலாய்ச்சிக்கிட்டு இருந்த நெட்டிசன்ஸுக்கு வகையா பியூஸ் கோயல் மாட்டிக்கிட்டதா சொல்றாங்க. ஆனா, நிர்மலா சீதாராமன் எனும் பெண்மணியை நெட்டிசன்களின் மீம் போரிலிருந்து காப்பாற்ற தன்னைத் தானே காத்துக்கொண்ட தியாகத் தலைவனாவே நான் பியூஸை பாக்குறேன். இப்புடியெல்லாம் பேசலைன்னா, நாடு முழுக்க குடியேற்றமடைந்தவர்களை நீக்கும்போது என்னையும் நாடு கடத்திருவாங்களோன்னு பயமா இருக்கு பியூஸு. நான் வேற நாலு லோன் வாங்கி வெச்சிருக்கேன். கட்டாம ஊரை விட்டு போய்ட்டன்னா, இந்த வெளிநாட்டுக்கு ஓடிப்போற தொழிலதிபர்கள் லிஸ்ட்ல நம்மளையும் சேத்துருவாய்ங்க. அப்டேட் குமாருன்ற பேரு, ஈசிஆர் பீச்சுல செதுக்கப்படனுமே தவிர, எஸ்.பி.ஐ வெளியிடுற ‘ஓடிப்போனவர்கள் பற்றிய அறிவிப்பு’ போஸ்டர்ல செதுக்கப்பட்டுறக் கூடாது. நீங்க அப்டேட்டைப் படிங்க. நான் போய் என் தலைவன் பியூஸுக்கு பேனர் போட்டுட்டு வர்றேன்.

Sonia Arunkumar

லுங்கி, பனியன் போட்டு வண்டி ஓட்டினா 2000₹, செருப்பு போட்டு வண்டி ஓட்டினா 1000ஓவா ஃபைனாம். மக்களை சம்பாதிக்க விட்றாய்ங்களோ இல்லயோ. இருக்கதை மொத்தமா அடிச்சி புடிங்கிருவாய்ங்க போல.

ரஹீம் கஸ்ஸாலி

Uber புக் செய்து ஏர்போர்ட்டிற்கு பயணம் செய்துகொண்டிருந்தவர் போன் வழியே நிர்மலா சீதாராமனின் பேட்டியை பார்த்துட்டு உடனே வாகனத்தை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தார். நடந்தே ஏர்போர்ட்டை அடைந்தபோது அவர் பயணம் செல்லவிருந்த விமானம் பறந்து இரண்டு மணி நேரமாகியிருந்தது.

-நொடிக்கதை.

உள்ளூராட்டக்காரன்

இந்த Ola, Uberல போறவன பூரா மறிச்சி, கீழ இறக்கி விட்டு நாலு மிதி மிதிச்சோம்னா இந்தியா பொருளாதாரம் முன்னேறிடும்

மெத்த வீட்டான்

ஒரு வாதத்துக்காக ஆட்டோமொபைல் துறை சரிவுக்கு Ola ,Uber நிறுவனங்களின் சேவைகளும் ஒரு காரணம் என வைத்துக்கொண்டால் அந்த நிறுவனங்கள் வாகனங்களை அதிக அளவில் வாங்கி இருக்க வேண்டுமே ? அப்படின்னா பஸ் ,ரயிலில் மக்கள் பயணிப்பதும் ஒரு காரணம்தானே !அப்போதெல்லாம் ஏன் இந்த மாதிரி சரிவு ஏற்படல ?

SKP KARUNA

முதல் நாள் பிக்பாஸ் வீட்டில், எங்கப்பாவை நான் பத்து வருஷமா பார்க்கலைன்னு கண்கலங்கிய போதே சொன்னேன்! நிச்சயம் இந்தப் பொண்ணோட அப்பாவை விஜய் டிவிதான் டிக்கெட் போட்டு அழைச்சுட்டு வருவான்னு.

Dr Ravikumar M P

எவ்வளவுதான் பெய்தாலும்

வானத்தை நனைப்பதில்லை

மழை

mohanram.ko

'இவ்வளவு சந்தோஷமா சிரிக்க சிரிக்க பேசுவாங்களா' என்று வியக்க வைக்கிறாங்க மனைவி, அவங்க வீட்டு சொந்தங்களோடு பேசும் போது மட்டும்

மயக்குநன்

'தகுதி'யே இல்லாத திமுக அதிமுகவை விமர்சிப்பதா?- ஹெச்.ராஜா.

தமிழகத்தில் 'தொகுதி'யே இல்லாத பாஜக மட்டும் திமுகவை விமர்சிப்பதா..?

எனக்கொரு டவுட்டு

தரமான சாலைகள் இருப்பதனால் தான் அதிக விபத்து ஏற்படுகிறது : கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோல்

கை குடுங்க, கலக்கிடீங்க..!

ஜால்ரா காக்கா

ஓலா ஒனருக்கும் ஊபர் ஒனருக்கும் வயித்துல இந்நேரம் புளிய கறைக்க ஆரம்பிச்சு இருக்கும்.. call taxiக்கு புதுசா என்ன tax கொண்டு வரப்போரானுகலோன்னு

கோழியின் கிறுக்கல்!!

எப்பவும் சுட சுட சாப்பிட்டா அம்மா சமையல்!

எப்பவும் சுட வச்சு, சுட வச்சு சாப்பிட்டா வீட்டம்மா சமையல்!!

மித்ரன்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்தினால் மக்களுக்கு மேலும் சுமை ஏற்படும்! - மம்தா பானர்ஜி #

எடப்பாடி நவ்: அங்க பாத்துட்டு அப்படியே நம்ம பக்கம் திரும்புவாங்களே..?!

Mr.பழுவேட்டரையர்

முதல்ல சாக்ஷி அப்பா

அப்பறம் சேரப்பா

நடுவுல ஒரு நைனா,

இப்ப லியாப்பா..

யப்பா யப்பப்பா, எத்தனை அப்பா..

கவின் இனி உன் பாடு...ப்பா... இந்த அப்பனுங்கள எல்லாம் சமாளிக்கிறதுக்கே உனக்கு titleஅ கொடுக்கலாம்டா ராசா

shivaas_twitz

கணவன்மார்கள் தைரியமாக பொண்டாட்டியுடன் சண்டை போட swiggy/zomatoவே காரணம்

உள்ளூராட்டக்காரன்

நம்ம கிட்ட MS Word இருந்தா அர்த்தம் கேப்பானுவ

நம்ம கிட்ட Excel இருந்தா கணக்கு கேப்பானுவ

நம்ம கிட்ட Photoshop இருக்குற வரைக்கும் இவனுங்களால ஒன்னும் பண்ண முடியாது ஜி

A.P.P.

கைச் செலவுக்கு

அப்பா அனுப்பிய

பணத்தில்...

அம்மாவின் பாசம்

அப்பாவின் வியர்வை

தங்கையின் எதிர்பார்ப்பு

ஆச்சியின் அன்பு

தம்பியின் தேடல்

அனைத்துமே

தென்பட்டதால்

செலவு செய்ய

மனமின்றி தவியாய்

தவிக்கிறேன் நான்.

ரஹீம் கஸ்ஸாலி

*ஆட்டோமொபைல் துறை சரிவை சந்திப்பதற்கு ஊலா, உபர் சேவைகளை மக்கள் பயன்படுத்துவதும் ஒரு காரணம்- நிர்மலா சீதாராமன்

*பார்க்கிங் பிரச்னையை தவிர்ப்பதற்காகவே பலர் சொந்தமாக கார்களை வாங்காமல் கால் டாக்சிகளில் பயணிக்கின்றனர்!- நிதின் கட்கரி

முதல்ல உங்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வாங்க

குழந்தை. செல்வா

பாதையை தேடாதே உருவாக்கு..!

ஆமா நொட்டுச்சு.. நல்ல பாதையிலயே போக முடியலயாம் இதுல புதுசா வேற பாதைய உருவாக்கனுமாம்..

Hasan Kalifa

“பார்க்கிங் பிரச்னையை தவிர்ப்பதற்காகவே பலர் சொந்தமாக கார்களை வாங்காமல், கால் டாக்சிகளில் பயணிக்கின்றனர்!” - நிதின் கட்கரி.

//அப்பாடா எங்கே நீங்களும் ஓலா ஊபர்ன்னு சொல்லிடுவிங்களோன்னு நினைச்சி பயந்துட்டேன்.

ஜோக்கர்...

"பிள்ளையார பிடிக்க குரங்கா போச்சு" என்பதற்க்கு அர்த்தம்,

கோபத்தில் இருக்கும் மனைவியை சமாதானப்படுத்த முயலும் கணவனுக்குதான் தெரியும்..!!!

ச ப் பா ணி

"கணக்கு புத்தகத்தில்

வைத்த

மயிலிறகு

குட்டி போடவில்லை,

முட்டை போட்டது..!

-நா.முத்துக்குமார்

மித்ரன்

சென்னை தலைமைச்செயலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு! - செய்தி #

தட் பாம்பு: ஏன்டா பாரீன் டூர் போயிட்டு வந்த எடப்பாடியை பாக்கவந்தது ஒரு குத்தமாடா..?!

90's kid நட்டு®

பெண்ணிடம் வயதையும்

ஆணிடம் சம்பளத்தையும்

கேக்க கூடாது.

ஆண் தனக்காக

சம்பாதிப்பதில்லை.

பெண் தனக்காக

வாழ்வதில்லை.

படித்ததில் ரசித்தது.

சுபாஜி

மீ: கும்பலாக சுத்துவோம்

நாங்க ஐயோ அம்மானு கத்துவோம்

நண்பன் : ஏன்டா கத்துவீங்க

மீ: ஆமா சரக்கு அடிச்சுட்டு வண்டியில போயி பள்ளத்துல விழுந்தா ஐயோ அம்மானுதான்

கத்துவோம்

தமிழன்டா

புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடுமையானது, மேற்கு வங்கத்தில் அமல் இல்லை: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

என்ன இருந்தாலும் இப்படி துணிஞ்சு சொல்ல முதுகெழும்பு நேரா இருக்கனும்

RahimGazzali

ரொம்ப நாளா டீக்கடை நடத்திட்டு இருந்தவரு திடீர்ன்னு கடையை மூடிட்டாரு. ஏன்னு கேட்டால் 'மக்கள் எல்லோரும் வீட்ல டீ குடிக்க ஆரம்பிச்சதுதான் என் தொழில் சரிவை சந்தித்ததுக்கு காரணம்' என்றார். அநேகமா வருங்காலத்தில் அவர் நிதியமைச்சரானாலும் ஆகலம். யாரு கண்டா..?!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

தமிழக பிஜேபி தலைவர் பதவியில் இருந்து தமிழிசை அவர்கள் நீக்கப்பட்டதே, மீம் இன்டஸ்டரி மிகவும் நலிவடைய காரணம்.

தமிழருவி

பயன்படாதது என்று எதுவுமில்லை..

பயன்படுத்த தெரியாதவர்கள் தான் உள்ளனர்..!!!

சவேதி

காசு கொடுத்து

"வாங்கிய " இன்பங்கள்

காசு கரைந்து போகும் வரை

காத்திருப்பதில்லை...!

-லாக் ஆஃப்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

வியாழன் 12 செப் 2019