மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

பன்னீர் தம்பிக்கு இடைக்காலத் தடை!

பன்னீர் தம்பிக்கு இடைக்காலத் தடை!

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா செயல்பட இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (செப்டம்பர் 12) உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைப் பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை தனியாக அறிவித்து கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதுதொடர்பாக தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த அம்மாசி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “பழனிச்செட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக நான் பொறுப்பில் உள்ளேன். மதுரையிலிருந்து தேனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கடந்த மாதம் தனியாக பிரிக்கப்பட்டது. அதற்கு 17 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். மற்ற 13 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த முன்னறிவிப்பும் இன்றி 17 உறுப்பினர்களும் திடீரென தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி பதவியேற்றனர். சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா உள்ளார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அதிமுகவினராகவும் உள்ளனர். எனவே 17 உறுப்பினர்களும் செயல்பட தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, “17 உறுப்பினர்களின் நியமனமும் தற்காலிகமானதுதான். எனவே இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதிகள், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா செயல்பட இடைக்காலத் தடை விதித்தனர். அத்துடன் நிர்வாகக் குழுவும் செயல்பட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 12 செப் 2019