மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

இனி வருமானவரி அதிகாரிகளின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு இடமில்லை!

இனி வருமானவரி அதிகாரிகளின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு இடமில்லை!

நேரடி வரிவிதிப்பு மத்திய வாரியம் வருமான வரி கட்டத் தவறியவர்கள் மீது வழக்குத் தொடுப்பது தொடர்பான சில விதிமுறைகளை தளர்த்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி, நேரடி வரிவிதிப்பு மத்திய வாரியத்தின் சுற்றறிக்கையில் டிடிஎஸ், வருமான வரி தொடர்பான வழக்குகளில் வரம்பு மற்றும் கால அளவை தளர்த்தியுள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறது.

25 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக, டிடிஎஸ் வைப்புத்தொகை செலுத்த வேண்டிய தேதியிலிருந்து 60 நாட்களுக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குகள் தொடரப்படாது என தெரிவித்திருக்கிறது.

அதே சமயம், உரிய தேதியில் டிடிஎஸ் செலுத்தாமல் இருப்பதையே பழக்கமாகக் கொண்டிருக்கும் நபர்களுக்கு இரண்டு சீனியர் அதிகாரிகளைக் கொண்ட குழு அவர்கள் மீதான நடவடிக்கைகளில் ஈடுபடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பதிவில், "நேர்மையாக வரி செலுத்துவோர் துன்புறுத்தப்படுவதில்லை என்பதையும், சிறிய அல்லது நடைமுறை மீறல்களைச் செய்பவர்கள் விகிதாசார அல்லது அதிகப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்பதையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளைக் கொண்டு வருமாறு நான் வருவாய் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன்" எனது கூறியுள்ளது இங்கே நினைவு கூறத்தக்கது.

தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று(செப்டம்பர் 11), அகமதாபாத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “முன்பெல்லாம் வருமானவரித் துறை அதிகாரிகள், ஒருவருக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனில் தாங்களாகவே முடிவு செய்து, அதை அனுப்ப வேண்டிய நபருக்கு நோட்டீஸ் அனுப்பி வந்தனர். ஆனால் இனி அப்படி அனுப்ப முடியாது. வரும் அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து, இந்த நடைமுறை ரத்து செய்யப்படுகிறது” என அறிவித்தார்.

இதன்படி இனி, வருமான வரித்துறை நினைத்தால் எடுத்தவுடனே நேரடியாக வருமான வரி குறித்த நோட்டீஸ் அனுப்ப முடியாது என்றும், முதலில் அந்த நோட்டீஸ் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்படும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் மையத்துக்கு தான் செல்லும் என்றும், பிறகு அங்கு ஆய்வு செய்யப்பட்ட பின் தான், சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த நோட்டீஸ் செல்லும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த மே மாதம், பாலிவுட் தயாரிப்பாளர் பிரோஸ் நதியத்வாலா 8.56 லட்சம் டிடிஎஸ் தொகையை செலுத்துவதில், தாமதம் ஏற்பட்டதற்காக மும்பை நீதிமன்றம் அவருக்கு மூன்று மாதங்கள் கடுமையான சிறைத்தண்டனை விதித்தது.

அதே போல, கடந்த ஆகஸ்ட் மாதம், நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில், ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த டிடிஎஸ் வரித்தொகையை விஷால் குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரித்துறைக்கு செலுத்தாததால், அவர்மீது வழக்கு பாய்ந்தது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 12 செப் 2019