மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 செப் 2019

மெளனத்தை மொழியாகக் கொண்ட அனுஷ்கா

மெளனத்தை மொழியாகக் கொண்ட அனுஷ்கா

மாதவன் - அனுஷ்கா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் சைலன்ஸ் படத்தில் அனுஷ்காவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

ரெண்டு படத்திற்குப் பின் 13ஆண்டுகள் கழித்து அனுஷ்காவுடன் மாதவன் நடிக்கும் படம் நிசப்தம். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மும்மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தெலுங்கில் நிஷப்த் என தலைப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் சைலன்ஸ் என தலைப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள சியாட்டில் நகரில் முழு படப்பிடிப்பையும் நடத்தியுள்ள படக்குழு, சென்ற மாதம் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை’ இன்று காலை படக்குழு வெளியிட்டிருக்கிறது. சாக்‌ஷி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் படத்தில் தோன்றவுள்ள அனுஷ்கா முதன் முறையாக வாய் பேச இயலாதவராக நடித்திருக்கிறார். மாதவனின் மனைவியாக இப்படத்தில் நடிக்கும் அனுஷ்கா ஓவியராகவும் நடித்திருக்கிறார்.

புலனாய்வு திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் கில் பில் என்ற ஆங்கில படத்தில் நடித்த மைக்கேல் மேட்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அஞ்சலி இப்படத்தில் முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக பாத்திரம் ஏற்றிருக்கிறார். ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 11 செப் 2019