மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 செப் 2019

தீபாவளி ரேஸ்: விலகிய விஜய் சேதுபதி

தீபாவளி ரேஸ்: விலகிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடித்த சங்கத் தமிழன் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சங்கத் தமிழன். இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரு கதாநாயகிகள் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தீபாவளியை முன்னிட்டு இப்படத்தை வெளியிடுவதாக படத்தை தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்புடன் போஸ்டரையும் வெளியிட்டது, இதனால், ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்களுடன் சங்கத் தமிழன் படமும் இணைந்தது.

இந்நிலையில், சங்கத் தமிழன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு திடீரென மாற்றியுள்ளது. அதாவது தீபாவளி அன்று வெளியாகவிருந்த சங்கத் தமிழன், அக்டோபர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தீபாவளி அன்று விஜய், கார்த்தி ஆகியோரின் படம் வெளியாவதாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் கடும் போட்டி நிலவுவதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், அக்டோபர் 4ஆம் தேதி அன்று வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் வெளியாகவிருக்கிறது. இதனால் எதிர்பார்ப்பிலிருக்கும் சங்கத் தமிழன் படமும் அசுரன் படமும் ஒரே நாளில் வெளியாகவிருக்கின்றன.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 11 செப் 2019