மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 செப் 2019

தமிழிசையிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக

தமிழிசையிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக

தெலங்கானா ஆளுநர் தமிழிசையிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக, தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 8ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்து முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்றிருந்தார். பதவியேற்பு நிகழ்ச்சியிலும் கடைசி வரை சந்திரசேகர ராவ் கலந்துகொண்டார்.

ஆனால், அன்றைய தினமே முதல்வர் சந்திரசேகர ராவின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான வனம் நரசிம்ம ராவ், ஆளுநர் நியமனத்துக்கு எதிராக தி ஹன்ஸ் இந்தியா ஆங்கிலப் பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்தார். ஆளுநர்கள் நியமனம் குறித்து வெளியான அந்தக் கட்டுரையில் ஆளுநர்களை நியமிப்பது தொடர்பான சர்க்காரியா கமிஷனின் பரிந்துரையை மேற்கோள் காட்டியிருக்கிறார். மேலும், “ஆளுநர்கள் நியமனம் அரசியல் சார்புடையதாக உள்ளது. பல மாநிலங்களிலும் ஆளுநர் நியமனம் இதுபோல்தான் உள்ளது. இதன்மூலம் மாநில அரசின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு தெலங்கானா மாநில பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெலங்கானா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணசாகர் ராவ், “தெலங்கானாவில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஆளுநரை அவமதிக்கும் விதமான கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இது தெலங்கானா அரசின் தகுதிக்கு ஏற்றதாக இல்லை” என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் நியமனம் குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் சுயாதீனமாக எழுதியிருந்தால் அது மாநில அரசுடன் தொடர்புடையதாக இருக்காது என்று புரிந்துகொண்டிருப்போம். ஆனால், ஆளுநர் நியமனம் குறித்து மாநில அரசிடம் சம்பளம் பெறக் கூடிய மூத்த அதிகாரி ஒருவர் எப்படி வெளிப்படையாக எழுத முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், “இதுதொடர்பாக அந்த அதிகாரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 11 செப் 2019