மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 செப் 2019

ஸ்டாலின் சொன்னதை செய்வார்: ஜெயக்குமார்

ஸ்டாலின் சொன்னதை செய்வார்: ஜெயக்குமார்

முதல்வருக்கு எப்போது திமுக பாராட்டு விழா நடத்தப்போகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை கொண்டுவந்தால் பாராட்டு விழா எடுக்கத் தயாராக உள்ளதாக கூறினார். இந்த நிலையில் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று அதிகாலை சென்னை வந்த முதல்வர், ‘8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால், இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 11) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல்வர் தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவந்துள்ளார். இன்னும் நிறைய வெளிநாட்டு முதலீடுகள் வர இருக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எப்போது பாராட்டு விழா நடத்தப்போகிறார். எங்களையெல்லாம் எப்போது அழைக்கப் போகிறார் என்று சொல்ல சொல்லுங்கள். அவர் சொன்னதை செய்வார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ள ஜெயக்குமார்,

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 11 செப் 2019