மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 செப் 2019

தீவிரவாத அச்சுறுத்தல்: காஷ்மீர் ஆப்பிள் கொள்முதலில் மத்திய அரசு!

தீவிரவாத அச்சுறுத்தல்: காஷ்மீர் ஆப்பிள் கொள்முதலில் மத்திய அரசு!

ஜம்மு காஷ்மீரில் பயிரிடப்படும் ஆப்பிள்களை விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு நேரடியாகக் கொள்முதல் செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு இன்னும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்து எல்லையில் தனது படைகளைப் பாகிஸ்தான் குவித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதவிர ஆப்பிள் உற்பத்தியாளர்கள் தங்களது விளைபொருட்களைச் சந்தையில் விற்கக் கூடாது என்று தீவிரவாதிகள் அச்சுறுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 6ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த இரு தீவிரவாதிகள் சோப்பூரைச் சேர்ந்த ஆப்பிள் பழ வியாபாரி குடும்பத்தினர் மீது நடத்திய தாக்குதலில் அவரது 25 வயது மகனும், 5 வயது பேத்தியும் காயமடைந்தனர்.

இந்த நிலையில், காஷ்மீர் கிராமத் தலைவர்களும் விவசாய பிரதிநிதிகளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கடந்த வாரம் சந்தித்திருந்தனர். அப்போது, காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் ஆப்பிள்களை விற்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது” என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் காஷ்மீர் விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு அங்குள்ள ஆப்பிள் உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாகப் பழங்களைக் கொள்முதல் செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சோப்பூர், பரிம்போரா, சோபியன், படென்கோ ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக ஆப்பிள்கள் பெற்றுக் கொள்ளப்படும். தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மூலம் கொள்முதல் நடைமுறை மேற்கொள்ளப்படும். 12 லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும். இந்த அமைப்பே விவசாயிகளிடம் ஆப்பிள்களை வாங்கி அதற்கான பணத்தைக் கொடுக்கும். விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணம் செலுத்தப்படும். ஏ, பி மற்றும் சி என அனைத்து வகையான ஆப்பிள்களும் வாங்கப்பட்டு அதற்குரிய பணம் கொடுக்கப்படும்” என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 11 செப் 2019