மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 செப் 2019

சந்திரயான் 2 திடீர் திருப்பம்: விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னல்கள் கிடைக்கவில்லை!

சந்திரயான் 2 திடீர் திருப்பம்: விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னல்கள் கிடைக்கவில்லை!

சந்திராயன் 2 விண்கலத்தை, இன்று (செப்டம்பர் 7) அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலாவின் மேற்பரப்பில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்திருந்த நிலையில்,கடைசி நேரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது .நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளத்தைத் தொடும் போதே, இஸ்ரோவின் தரை நிலையம் லேண்டர் விக்ரமுடன் தொடர்பை இழந்தது.

இருப்பினும், லேண்டர் விபத்துக்குள்ளானதா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளி கட்டுப்பாட்டு மையம் தற்போது கிடைத்த தரவுகளை பகுப்பாய்வு செய்து வருகிறது.

தலைவர் டாக்டர் கே சிவன் கூறுகையில், “லேண்டர் விக்ரம் 2.1 கி.மீ உயரத்தை அடையும் வரை இயல்பாகவே இருந்தது. அதைத் தொடர்ந்து, லேண்டரிலிருந்து தகவல் தொடர்பு இழந்தது. காரணம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது” என கட்டுப்பாட்டு அறையிலிருந்த கலக்கமடைந்த விஞ்ஞானிகளுக்கு மத்தியிலிருந்து அறிவித்தார்.

சந்திரயான் 2 தரையிறங்குவதைக் காண பெங்களூரில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் (ஐ.எஸ்.டி.ஆர்.ஐ.சி) கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் அளித்தார்.

"வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளால் நிறைந்துள்ளது. இது சிறிய சாதனை அல்ல. ஒட்டுமொத்த தேசமும் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறது. சிறந்ததை நம்புங்கள்" என்று பிரதமர் மோடி விஞ்ஞானிகளிடம் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 07) காலை 8 மணியளவில், இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து செய்தியாளர்களிடம் சந்திராயன் 2 பற்றிய தகவல்களை பகிரவுள்ளார்.

தேசமே எதிர்பார்ப்புடன் விழித்துக் கொண்டிருந்த சந்திராயன் 2வின் வரலாற்று நிகழ்வு, திட்டமிட்டபடி நடைபெற்றாலும், கடைசி கட்ட நிமிடங்களில் விக்ரம் தொடர்பை இழந்தது விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவரையும் சோகத்துக்குள்ளாக்கியது.

அதிகாலை மூன்று மணிக்கு நடப்பதாக இருந்த திட்டமிடப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டது.

லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யனுடனான தொடர்பு இழந்தாலும், 100 கி.மீ சுற்றுப்பாதையில் உள்ள ஆர்பிட்டர் நல்ல நிலையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஏன் லேண்டர் விக்ரமிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை, தற்போது விக்ரம் என்ன நிலையில் இருக்கின்றது போன்ற தகவல்களை இஸ்ரோ இன்று காலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டுப் பயணம்: இடையிலேயே திரும்புகிறாரா எடப்பாடி?


வடிவேலு ஆசானுக்கு வாழ்த்து சொல்லணும்: அப்டேட் குமாரு


பாஜகவுடன் பேச தினகரனுக்கு சசிகலா உத்தரவு!


ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்


பொருளாதாரம் பற்றிதான் கவலை: திகாரில் சிதம்பரம்


பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

சனி 7 செப் 2019