மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 செப் 2019

ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்

ஹெச்.ராஜா மிரட்டுகிறார்: டி.கே.எஸ்.இளங்கோவன்

சிதம்பரம் போல எதிர்க்கட்சித் தலைவரும் கைது செய்யப்படுவார் என்ற ஹெச்.ராஜாவின் கருத்துக்கு டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலளித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரத்தின் நிலை தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஏற்படும் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். அதாவது சிதம்பரம் கைது செய்யப்பட்டது போலவே ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்ற அர்த்தத்தில் ஹெச்.ராஜா அதைக் கூறியிருந்தார்.

இதைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “சிதம்பரம் கைதுக்குப் பிறகு மத்திய அரசை ஸ்டாலின் மென்மையாகவே விமர்சிக்கிறார். அவருக்கு கைது பயம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் நேற்று (செப்டம்பர் 5) செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “சிதம்பரம் கைது, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி பொருளாதாரச் சரிவை மத்திய பாஜக அரசு மறைக்கப் பார்க்கிறது என்று நேற்றுகூட திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இதைத்தான் நாங்கள் பயப்படுத்துவதற்கு அடையாளம் என ஜெயக்குமார் நினைக்கிறாரா? அவருடைய பார்வையில் கோளாறு இருக்கிறது” என்று ஜெயக்குமாரின் கருத்துக்குப் பதிலளித்தார்.

ஹெச்.ராஜாவின் கருத்து குறித்த கேள்விக்கு, “சிபிஐ அதிகாரியாக, நீதிபதியாக, ஏன் கடவுளாகக் கூட ஹெச்.ராஜா மாறுவார். கைது செய்வதற்கு ஒரு காரணம் வேண்டாமா? ஹெச்.ராஜா அப்படிக் கூறுகிறார் என்றால் அது மிரட்டுவதாகத்தான் அர்த்தம்” என்று குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “ஹெச்.ராஜாவையெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை” என்று ஒரே வார்த்தையில் தனது பதிலை முடித்துக்கொண்டார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!


தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ!


ஸ்டாலினை பாஜக தலைவர் பாராட்டிய மர்மம்!


சிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா


ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வெள்ளி 6 செப் 2019