மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 செப் 2019

சிவக்குமார் கைதுக்கு வருந்தும் எடியூரப்பா

சிவக்குமார் கைதுக்கு வருந்தும் எடியூரப்பா

காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸின் முக்கிய தலைவரும், அம்மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ரூ.8.59 கோடி கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தது. டெல்லியில் சிவக்குமாரிடம் நான்கு நாட்களுக்கு மேல் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகம் முழுவதும் இன்று (செப்டம்பர் 4) போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த டி.கே.சிவக்குமார், ‘என்னை கைது செய்யும் மிஷனில் இறுதியாக வெற்றியும் பெற்ற பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சிவக்குமாரின் கைது வருத்தமளிப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தபோது, இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த எடியூரப்பா, “சிவக்குமார் கைது செய்யப்பட்டது எனக்கு எந்தவிதத்திலும் மகிழ்ச்சியளிக்கவில்லை.

அனைத்து வழக்குகளிலும் இருந்து சிவக்குமார் விரைவில் வெளிவர வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் ஒருவரைக் கூட காயப்படுத்தியதில்லை. யாருக்கும் கெட்டது நடக்க வேண்டும் என்றும் விரும்பவில்லை. சட்டம் தன்னுடைய கடமையைச் செய்துள்ளது. சிவக்குமார் விடுவிக்கப்பட்டால் அனைவரையும் விட நான்தான் மகிழ்ச்சியானவனாக இருப்பேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ரிலாக்ஸ் சிதம்பரம்: டென்ஷனில் சிபிஐ


‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


சிதம்பரத்தைத் தொடர்ந்து சிவக்குமார் கைது!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

புதன் 4 செப் 2019