மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

பொருளாதாரத்தை இவர்கள் பார்த்துக்கொள்வார்கள்: அமைச்சர்

பொருளாதாரத்தை இவர்கள் பார்த்துக்கொள்வார்கள்: அமைச்சர்

பொருளாதார சரிவு மற்றும் வங்கிகள் இணைப்பு தொடர்பாக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவிவரும் சூழலில், அதைச் சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டிலுள்ள பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்கிடையே, நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் ஜிடிபி சதவிகிதம் 5.8 லிருந்து 5 ஆக குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் மதுரையில் நேற்று (ஆகஸ்ட் 31) செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், பொருளாதார மந்தநிலை சம்பந்தமாகக் கேள்வி எழுப்ப, அதற்கு அவரோ, “இந்தியாவின் பொருளாதாரம் உலகளாவிய பொருளாதாரமாக உள்ளது. பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு வரத்தான் செய்யும். நிச்சயமாக அதிகளவு பாதிப்பு வராது. பிரதமர் மோடியும், நமது மண்ணின் மகள் நிர்மலா சீதாராமனும் நாட்டின் நிதி மேலாண்மையைச் சிறப்பாகச் செயல்படுத்துகின்றனர். இருவரும் பொருளாதாரத்தைப் பார்த்துக்கொள்வார்கள்” என்று பதிலளித்தார்.

வங்கிகள் இணைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்திய ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி என அனைத்து இந்தியப் பெரு வங்கிகளும் சர்வதேசத் தரத்தில் செயல்பட வேண்டும். உலகளாவிய தர மதிப்பீடு இதற்குத் தேவை. அதற்காகத்தான் வங்கிகள் இணைப்பு நடந்திருக்கிறது என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019