மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

மனிதநேய மைய இலவசப் பயிற்சி: மாணவி வெற்றி!

மனிதநேய மைய இலவசப் பயிற்சி: மாணவி வெற்றி!

மனிதநேய மையத்தின் இலவசப் பயிற்சி வகுப்பில் படித்த ஈரோட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகள் சரண்யா, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட வன சரகர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி ஆகிய அரசுத் துறை தேர்வுகளில் மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் மனிதநேய மையத்தை நடத்தி வருகிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்த மையத்தின் மூலம் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவசப் பயிற்சியால் பல ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் கருதி செயல்பட்டு வரும் இந்த மையத்தின் மூலம் 3,381 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். அந்த வரிசையில் ஈரோட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் துரைசாமியின் மகள் சரண்யாவும் இடம்பெற்றுள்ளார்.

2017- 18ஆம் ஆண்டில் மனிதநேய இலவசப் பயிற்சி மையத்தில் சேர்ந்து சரண்யா படித்து வந்துள்ளார். தனது கடின உழைப்பாலும் மனிதநேய மையத்தில் வழங்கப்பட்ட பயிற்சியாலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட வன சரகர் தேர்வில் சரண்யா வெற்றி கண்டுள்ளார்.

இதுகுறித்து சரண்யா கூறுகையில், “வன சரகர் தேர்வுக்குக் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுத் தேர்வு நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். வன சரகர் தேர்வில் வெற்றிபெற மூன்று பேப்பர் எழுத வேண்டும். ஒரு பேப்பருக்கு 300 மதிப்பெண் வீதம் 900 மதிப்பெண்ணுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 598 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும். இதற்கும் தனியாகப் பயிற்சி வழங்க மனிதநேய மையத்தால் கோச் ஏற்பாடு செய்யப்பட்டது. உடற்தகுதி தேர்வைத் தொடர்ந்து நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற வேண்டும். மனிதநேய மையத்திலேயே முன் மாதிரி தேர்வு நடத்தப்பட்டதால் இதிலும் வெற்றி பெற முடிந்தது. அனைத்து தேர்விலும் வெற்றி பெற்று இறுதியாக வன சரகர் பணிக்குத் தேர்வாகினேன்” என்று சரண்யா பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், “நான் கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்தவள். அப்பா லாரி ஓட்டுநர். பிஎஸ்ஸி பாரஸ்ட்டரி படித்துள்ளேன். மனிதநேய மையத்தில் இலவசப் பயிற்சி வழங்கப்படுவதை அறிந்து, சென்னை வந்தேன். அங்குள்ள விடுதியிலேயே தங்கி படித்தேன். மனிதநேய மையத்தில் சிறப்பாகப் பயிற்சி அளிக்கப்பட்டது” என்றார். வன சரகர் பணிக்குத் தேர்வானதைத் தொடர்ந்து தனது வெற்றிக்குக் காரணமாக இருந்த மனிதநேய மையத்தின் தலைவர் சைதை துரைசாமியை நேற்று (ஆகஸ்ட் 31) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் சரண்யா.


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019