மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

விஹாரியின் சதமும் பும்ராவின் வேகமும்!

விஹாரியின் சதமும் பும்ராவின் வேகமும்!

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளிலேயே முக்கியக் கட்டத்தை எட்டியது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. ஹனுமா விஹாரி 42 ரன்களுடனும், ரிஷாப் பந்த் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே இந்திய அணியின் ஸ்கோர் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹோல்டர் வீசிய பந்தில் ரிஷாப் பந்த் (27 ரன்) ஸ்டம்புகளைப் பறி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 16 ரன்னில் வெளியேறினார்.

நிதானம் காட்டிய விஹாரி மூன்றாவது அரை சதத்தை கடந்து நிலைத்து நின்று அசத்தினார். 126 ஓவர் முடிந்திருந்தபோது, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்திருந்தது. தொடர்ந்து எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தார் இஷாந்த் ஷர்மா. பேட்ஸ்மேன்களை விரைவாக விக்கெட் எடுத்த மேற்கிந்திய பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மாவை வெளியேற்ற தடுமாறினர். 80 பந்துகளைச் சந்தித்த அவர் 57 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதைத் தொடர்ந்து களம் இறங்கிய முகமது ஷமி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

மறுமுனையில் ஆடிய விஹாரி டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். கடந்த டெஸ்ட் போட்டியில் 93 ரன்கள் சேர்த்து சதத்தை தவறவிட்ட அவர், இந்தப் போட்டியில் 111 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 416 ரன்களை குவித்தது.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜாசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளும், கார்ன்வால் 3 விக்கெட்டும், பிராத்வெயிட், ரோச் தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆரம்பத்திலிருந்தே இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக பும்ராவின் மந்திரப் பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர்.

33 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 87 ரன்கள் எடுத்து அந்த அணி தடுமாறி வருகிறது. இதில் பும்ரா மட்டும் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். முகமது ஷமி தன் பங்குக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். சொந்த மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதாபகரமான நிலையில் உள்ளது. அந்த அணி தரப்பில் ஹமில்டன் 2 ரன்களுடனும், கான்வால் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி மேற்கொண்டுள்ள இந்த மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் டி20, ஒருநாள் தொடர்களில் ஒரு வெற்றியைக்கூட விட்டுவைக்கவில்லை. அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியிலும் எழுச்சி கொள்ளாமல் உள்ளது.


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019