மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

பெரியார் பேருந்து நிலையத்தில் கோயில் கோபுர வடிவமா?

பெரியார் பேருந்து நிலையத்தில் கோயில் கோபுர வடிவமா?

மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தைக் கோபுர வடிவில் அமைப்பதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகரில் தந்தை பெரியார் பேருந்து நிலையம் 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 344 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் புதிய கட்டுமானத்துக்கான வரைபடமும் வெளியிடப்பட்டது. அதில், மீனாட்சியம்மன் கோயில் கோபுர வடிவத்தில் முன்புற முகப்பு இடம்பெற்றிருந்தது. இதற்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, போராட்டமும் நடைபெறும் எனவும் தெரிவித்தன.

இதுதொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 31) அறிக்கை வெளியிட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “வரைபடம் அப்படி இருக்காது, மாற்றப்படும் எனக் கூறினர். மாநகர ஆணையரும் அதைத் தெளிவுபடுத்தினார். ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அவர்கள் மதுரை சென்றபோது, கோபுரம் வடிவிலான வரைபடம் அடிப்படையிலேயே மதுரை பெரியார் பேருந்து நிலையம் வடிவமைக்கப்படும் என்ற செய்தி வெளிவந்துள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

“இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கப்படத்தக்கவர்கள். பெரியார் பெயரிலான பேருந்து நிலையத்தை, கோயில் கோபுர வடிவத்தில் அமைப்பது எந்த வகையில் சரியானதாகும்? பெரியாரைக் கொச்சைப்படுத்துவதோடு அல்லாமல், அப்படி வைக்கப்படும் கோயில் கோபுரமும் காலாகாலத்திற்கும் வீண் சர்ச்சைக்கும், வெறுப்புக்கும் உரியதாகவே ஆகும்” என்று குறிப்பிட்டுள்ள வீரமணி,

தந்தை பெரியார் பெயரை ஒரு பக்கத்தில் உச்சரித்துக்கொண்டும், சுவரொட்டிகளில் அவர் உருவத்தைப் பொறித்துக் கொண்டும், இன்னொரு பக்கத்தில் இவற்றுக்கு முற்றிலும் முரண்பாடாக அதிமுக அரசு நடந்துகொள்வது கேலிக்குரியதேயாகும் என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், “ஒரு மதச்சார்பற்ற அரசில், அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தில் மத அடையாளத்தைப் புகுத்துவது சட்டப்படியும் தவறான ஒன்றாகும். தமிழ்நாடு அரசு இதுபோன்ற வீண் வேலைகளில் ஈடுபடாமல் நாட்டுக்கு மிகவும் தேவையான வளர்ச்சிப் பணிகளில் நாட்டம் செலுத்துவதே நல்லது. இல்லையெனில் மதச்சார்பற்ற சக்திகள், கட்சிகளை ஒன்றிணைத்துக் கடும் போராட்டத்தை நடத்திடும் நிலை ஏற்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019