மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

தெலங்கானா ஆளுநர் தமிழிசை: தலைவர்கள் வாழ்த்து!

தெலங்கானா ஆளுநர் தமிழிசை:  தலைவர்கள் வாழ்த்து!

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஐந்து மாநில ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, தெலங்கானா ஆளுநராக இருந்த நரசிம்மன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தமிழிசை, “தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. கடுமையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதை மோடியும் அமித் ஷாவும் நிரூபித்துள்ளனர். ஆண்டவனுக்கும் நாட்டை ஆண்டுகொண்டிருப்பவருக்கும் நன்றி. தெலங்கானாவுக்கு ஆளுநரானாலும் நான் தமிழகத்தின் சகோதரிதான். 44 லட்சம் பேரை கட்சியில் சேர்த்துவிட்டு நான் பதவி விலகுவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து தனது தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளார்.

இந்த நிலையில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். லண்டனிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தமிழிசைக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி தமிழிசைக்கு வாழ்த்துகள். அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் வாழ்த்துச் செய்தியில், “மூத்த அரசியல் தலைவரும், சிறந்த இலக்கியவாதியுமான தமிழிசையை ஆளுநர் பதவியில் அமர்த்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பு மகள் என்று எப்பொழுதும் என்னால் அழைக்கப்படும் டாக்டர் தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “கொள்கை ரீதியாக கடுமையான கருத்து வேறுபாடுகளுக்கு இடையில் கருத்து மோதல்களை மிகுந்த நாகரீகத்தோடு நடத்தியவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவருக்கு ஆளுநர் பதவி அளித்திருப்பது மிகவும் பொருத்தமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019