மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

ஒருவருக்குக் கூட வேலைபோகாது: நிதியமைச்சர்

ஒருவருக்குக் கூட வேலைபோகாது:  நிதியமைச்சர்

பொதுத் துறை வங்கிகள் இணைப்பால் ஒரு ஊழியருக்குக் கூட வேலை பறிபோகாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. அத்தோடு நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி சதவிகிதம் 5 சதவிகிதமாக குறைந்ததும் இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது. பொருளாதார மந்தநிலையை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு படியாக பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

ஆனால், இதனால் வங்கி ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும் என்று தெரிவித்து வங்கி ஊழியர்கள் சம்மேளனம் நாடு முழுவதும் பல இடங்களில் நேற்று போராட்டம் நடத்தியது. சென்னையில் இன்று (செப்டம்பர் 1) செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமனிடம், வங்கி ஊழியர்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “அது தவறான தகவல். நான் கடந்த வெள்ளிக் கிழமை என்ன கூறினேன் என்பதை வங்கி ஊழியர்களும், சங்கங்களும் நினைத்துப் பார்க்க வேண்டும். வங்கி இணைப்பு நடவடிக்கையால் ஒரு ஊழியருக்குக் கூட வேலை பறிபோகாது என்பதை நான் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளேன். இதுவரை அவர்கள் செய்த வேலையை தொடரப் போகிறார்கள். அதில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. கடந்த ஆண்டு ஸ்டேட் வங்கியுடன் 4 வங்கிகள் இணைக்கப்பட்டபோது ஒருவருக்கு கூட வேலை போகவில்லை” என்று தெரிவித்தார்.

அவரிடம் பொருளாதார மந்தநிலை இருப்பதை அரசு ஒப்புக்கொள்கிறதா, அதற்கு சாட்சியாகத்தான் நாம் அனைவரும் இருக்கிறோமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நான் தொழிலதிபர்களிடம் பேசி வருகிறேன். அவர்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கேட்டுள்ளேன். அவர்களுக்கு என்ன வேண்டும், அரசிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதையும் கேட்டுள்ளேன். இதனை இரண்டு முறை செய்துவிட்டேன். அதனை மேலும் செய்வோம்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலையளிக்கும் வகையில் இருப்பதாக கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமரும், பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங், “பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகளை கைவிட்டு தற்போதைய நிலையிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “ஓ அவர் அப்படி சொல்லியுள்ளாரா ? சரி அவருக்கு நன்றி. அவரின் கருத்தை நான் எடுத்துக்கொள்கிறேன். இதுதான் என்னுடைய பதில்” என்று சொன்னார்.


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


டிஜிட்டல் திண்ணை: பன்னீர் மீது எடப்பாடி ஊழல் புகார்!


நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019