மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

கடலூர்: ஹெச்.ராஜா வருகைக்கு அதிமுக, திமுக எதிர்ப்பு!

கடலூர்: ஹெச்.ராஜா வருகைக்கு அதிமுக, திமுக எதிர்ப்பு!

கடலூர் மாவட்டத்தில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொள்ள வரும் ஹெச்.ராஜாவுக்கு திமுக மற்றும் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள அரியநாச்சி கிராமத்தில் 80 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இதன் கட்டிடங்கள் பழுதடைந்ததால் கோவிலுக்கு திருப்பணி செய்ய கிராமத்தின் ஒரு தரப்பினர் முடிவெடுத்துள்ளனர். ஆனால், இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் திருப்பணி செய்வது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை நீடித்துவந்துள்ளது. இதுதொடர்பான வழக்கும் திட்டக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் அரியநாச்சியில் நாளை நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்பதாக இருந்தது. இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினர், ஹெச்.ராஜாவை வரவேற்று விளம்பர பேனர்களும் வைத்துள்ளனர்.

ஆனால், ஹெச்.ராஜாவின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக மற்றும் அதிமுகவினர், இதுதொடர்பாக அப்பகுதிகளில் போஸ்டரும் ஒட்டியுள்ளனர். அதில், “கடலூர் மாவட்டம் அரியநாச்சி கிராமத்தில் சார்-ஆட்சியரின் உத்தரவு மற்றும் திட்டக்குடி நீதிமன்றத்தின் உத்தரவு இவைகளை மீறி சாமி பெயரில் வன்முறை தூண்டவரும் இந்து அதர்ம கொள்கை வாதி ஹெச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவண் அதிமுக மற்றும் திமுக கிளைக் கழகங்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹெச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவில் பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கும் சூழலில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஹெச்.ராஜா வந்தால் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்படலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


டிஜிட்டல் திண்ணை: பன்னீர் மீது எடப்பாடி ஊழல் புகார்!


நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019