மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

ஆளுநர் தமிழிசை: அடுத்த பாஜக தலைவர் யார்?

ஆளுநர் தமிழிசை: அடுத்த  பாஜக தலைவர் யார்?

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று (செப்டம்பர் 1) காலை தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை வெளிவந்த உத்தரவுக்குப் பிறகுதான் இந்தத் தகவலே தமக்குத் தெரியும் என்றும், ஆச்சரியமாக இருப்பதாகவும், தெலங்கானாவுக்கு ஆளுநர் ஆனபோதும் தமிழ்நாட்டுக்கு நான் என்றுமே சகோதரிதான் என்று கண்கலங்கச் சொல்லியிருக்கிறார் தமிழிசை

ஆனால் பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன. தமிழிசையின் அரசியல் வாழ்வு இத்தோடு முடிந்துவிட்டது என்றும் இந்த அறிவிப்பால் தமிழிசையின் உட்கட்சி அரசியல் எதிரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்

ஆபரேஷன் சக்சஸ்... ஆனால்?

தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை போட்டியிடும்போதே அவருக்கு தோல்வி உறுதி என்று தெரியும். ஆனாலும் ஜனநாயகப் போர்க்களத்தில் தமிழகத்தின் பாஜக தலைவரே களமிறங்காமல் போனால் வேறு யார் இறங்குவார்கள் என்று துணிந்து களமிறங்கினார் தமிழிசை. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா இருவரிடமும் மிகுந்த நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார் தமிழிசை. அதனால், தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் தமிழிசையை மத்திய அமைச்சர் ஆக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழக பாஜக வட்டாரத்தில் நிலவியது.

அதேநேரம், ‘தமிழ்நாடு பாஜக தலைவராக தமிழிசை பதவிக் காலம் முடியும் நேரத்தில் அவரை மத்திய அமைச்சர் ஆக்கிவிட்டால் தமிழக பாஜகவுக்குள் மீண்டும் தலையெடுப்பார் என்று கருதி அவர் மீது பல புகார்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டன. இவர் காலத்தில் ஊடகங்களில்தான் கட்சி வளர்ந்தது, களத்தில் வளரவில்லை என்பதே அதற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டது.

ஆனால் தமிழிசை கட்சி வளர்ச்சி தொடர்பான விவரங்களையும், கட்சி நடத்திய போராட்டங்கள், நிகழ்ச்சிகள். உறுப்பினர் சேர்க்கைகள் போன்றவை பற்றி ஆறு மாதத்துக்கு ஒருமுறை மினிட் புக் என்ற பெயரில் ஆவணப்படுத்தி புத்தகமாகத் தயார் செய்து பாஜக தலைமைக்கு அனுப்பி வந்தார். இதனால் கட்சி வளர்ச்சி பற்றி அவரிடம் பெரிய அளவு குறை இல்லை என்பதை உணர்ந்தது பாஜக தலைமை. ஆனால் தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சர் என்பதிலும் ஒரு பாஜக தலைமை ஒரு முடிவுக்கு வரவில்லை. அதனால்தான் தமிழிசையை தனிப்பட்ட முறையில் கௌரவிக்கும் விதமாக அவருக்கு தெலங்கானா ஆளுநர் பதவியை அளித்திருக்கிறார் அமித் ஷா

அடுத்த தலைவர் யார்?

தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக யார் என்ற போட்டி இதையடுத்து அதிகமாகிவிட்டது. இதுவரை இருந்த பாஜக தலைவர்கள் யாரும் இனி வேண்டாம், அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே தலைமையின் முடிவு. இதை உணர்ந்துதான் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளரான கருப்பு முருகானந்தத்துக்கு சிபாரிசு செய்திருக்கிறார். தமிழக பாஜக இளைஞரணித் தலைவர் வினோஜ், மதுரை பாஜகவை சேர்ந்த சீனிவாசனும் பட்டியலில் இருக்கிறார்கள். தேசிய இளைஞரணித் துணைத் தலைவரும் கோவையைச் சேர்ந்தவருமான ஏ.பி. முருகானந்தம் இந்தப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார் என்கிறார்கள். தமிழகத்தின் புதிய தலைவர் கொங்கு வட்டாரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. அதனால் சிபி.ராதாகிருஷ்ணனும் நம்பிக்கையோடு இருக்கிறார்.

ஆனால், அடுத்த தலைவர் என்பவர் அடுத்த ஜெனரேஷன் தலைவராக இருக்கவேண்டும் என்ற பாஜக தலைமையின் முடிவின்படி பார்த்தால் ஏ.பி. முருகானந்தம், கருப்பு முருகானந்தம், வினோஜ், மதுரை சீனிவாசன் ஆகியோர் பெயர்களே பட்டியலில் இருக்கிறது என்கிறார்கள்.


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


டிஜிட்டல் திண்ணை: பன்னீர் மீது எடப்பாடி ஊழல் புகார்!


நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019