மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

பொருளாதாரத்தின் நிலை கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்

பொருளாதாரத்தின் நிலை கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்

தற்போது பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவிவரும் சூழலில், அதனை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது. இதற்கிடையே, நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் ஜிடிபி சதவிகிதம் 5.8 லிருந்து 5 ஆக குறைந்துள்ளது. இது பொருளாதார மந்தநிலை இருப்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், அதனை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 1) கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமரும், பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங், “தற்போது பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதமாக குறைந்திருப்பது இந்தியாவில் நீண்ட நாட்கள் தேக்க நிலை நீடித்ததற்கான ஆதாரமாக உள்ளது. இந்தியா பொருளாதாரம் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பினும் மோடி அரசின் தவறான முடிவுகள் காரணமாக இந்த பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “உற்பத்தித் துறையின் வளர்ச்சி 0.6 சதவிகிதமாக குறைந்திருப்பது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. பணமதிப்பழிப்பு மற்றும் அவசரமாய் செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி போன்ற மனிதத் தவறுகள் காரணமாக நமது பொருளாதாரம் மீளமுடியாத நிலையில் உள்ளது. இந்த நிலை நீடிக்கக் கூடாது. எனவே மோடி அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயல வேண்டும்” என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


டிஜிட்டல் திண்ணை: பன்னீர் மீது எடப்பாடி ஊழல் புகார்!


நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019