மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

போழுதுபோக்குக்காகவே வெளிநாட்டுப் சுற்றுப் பயணம்: ஸ்டாலின்

போழுதுபோக்குக்காகவே வெளிநாட்டுப் சுற்றுப் பயணம்: ஸ்டாலின்

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான திமுக தலைவர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பூலித்தேவனின் 304வது பிறந்த நாள் விழா இன்று (செப்டம்பர் 1) கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நெல்லையில் நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து பூலித்தேவன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “முதல்வர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. மேலும், 10 அமைச்சர்கள் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளாக நடந்துவரும் அதிமுக ஆட்சியில் இதுவரை 2 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துள்ளது. அதன்மூலமாக 5.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அது என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறோம். மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதுகுறித்து எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளாமல் பொழுதுபோக்குவதற்கு செல்வது போல வெளிநாடு சென்றுள்ளனர். இன்னும் சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையை அதிமுக அமைச்சரவை என்று சொல்ல முடியாது. சுற்றுலாத் துறை அமைச்சரவை என்றுதான் சொல்ல முடியும்” என விமர்சித்தார்.

பன்னீர்செல்வம் பதில்

துணை முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்கும்போது இதுதொடர்பாக கேள்வி எழுப்பபப்ட்டது. அதற்கு “முதல்வர் தனது வெளிநாட்டுப் பயணம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு தெளிவான பதிலை தந்துவிட்டார். ஆனாலும், கீழ்த்தரமான அரசியல் செய்யும் விதமாக எதிர்க்கட்சிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்.

அரசு செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் எதிராகவே எதிர்க்கட்சித் தலைவர் கருத்து கூறிவருகிறாரே என்ற கேள்விக்கு, “அவர் தவறான தகவல்களை தந்துகொண்டிருக்கிறார். அவராகத்தான் திருந்த வேண்டும். இல்லையெனில் மக்கள் அவரை திருத்துவார்கள்” என்று பதிலளித்தார்.


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


டிஜிட்டல் திண்ணை: பன்னீர் மீது எடப்பாடி ஊழல் புகார்!


நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019