மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

லாலு உடல்நிலை மோசம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

லாலு உடல்நிலை மோசம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ராஞ்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு ராஞ்சியிலுள்ள பிஸ்ரா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட லாலு, கடந்த ஓராண்டாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் ராஞ்சியிலுள்ள ரிம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றிருந்தார்.

இந்த நிலையில் சீறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டுவந்த லாலு பிரசாத் யாதவ் தற்போது ராஞ்சியிலுள்ள ராஜேந்திர பிரசாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுதொடர்பாக லாலுவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் டி.கே.ஜா கூறுகையில், “லாலுவின் சிறுநீரகம் 63 சதவீதம் பாதிக்கப்பட்டுவிட்டது. 37 சதவீதம் மட்டுமே செயல்படுகிறது. கடந்த ஒரு வாரமாக அவரது உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு ரத்தத்தில் நோய்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவரது சிறுநீரக இயக்கம் 50 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக குறைந்துள்ளது. ரத்த அழுத்தமும் அதிகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


டிஜிட்டல் திண்ணை: பன்னீர் மீது எடப்பாடி ஊழல் புகார்!

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019