மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

சுவிஸ் வங்கி கறுப்புப் பணம்: இன்று வெளியாகும் இந்தியர் பட்டியல்!

சுவிஸ் வங்கி கறுப்புப் பணம்: இன்று வெளியாகும் இந்தியர் பட்டியல்!

கறுப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை இன்று சுவிஸ் வங்கி ஒப்படைக்கிறது.

பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க, சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில் கோடிக்கணக்கான கறுப்புப் பணம் பதுக்கி வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்து பணம் பதுக்குபவர்கள் பற்றிய விவரங்களை அந்நாட்டு அரசு பாதுகாத்து வருகிறது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணமும் உள்ளதால், கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

அதன் பலனாக, இந்தியா - சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையேயான தகவல்கள் மாற்றம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை வெளியிட உள்ளதாக சுவிஸ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்தத் தகவல் பரிமாற்று ஒப்பந்தத்தில் (Automatic Exchange of Information (AEOI) agreement) கடந்த ஆண்டு (2018) சுவிட்சர்லாந்து கையெழுத்திட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டுடன் AEOI ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்போது சுவிஸ் நாட்டு நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்தியாவிற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு நவம்பர் 2016ஆம் ஆண்டில் சுவிஸ் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு, டிசம்பர் 2017ஆம் ஆண்டில் அனுமதி பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, சென்ற ஆண்டில் சுவிஸ் நாட்டில் கறுப்புப் பணம் பதுக்கி உள்ள இந்தியர்களின் விவரங்களை சுவிஸ் வங்கி இன்று ஒப்படைக்க உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019