மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

பிகில்: விஜய்யின் ‘வெறித்தனம்’!

பிகில்: விஜய்யின் ‘வெறித்தனம்’!

விஜய் நடிக்கும் பிகில் படத்தின் ரிலீஸை எதிர்பார்ப்பது போல அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருப்பது ‘வெறித்தனம்’ பாடலைத்தான்.

இளையராஜாவிலிருந்து பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ள விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல்கூட பாடவில்லையே என்ற வருத்தம் அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் பிகில் படத்தில் விஜய் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளதாகப் படக்குழு அறிவித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஏற்கெனவே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப்பெண்ணே பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில் வெறித்தனம் பாடலின் புரொமோ வீடியோவைப் படக்குழு நேற்று வெளியிட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், அட்லி, பாடலாசிரியர் விவேக் ஆகியோர் இந்தப் பாடலின் இசையமைப்பில் ஈடுபட்ட காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

நம்ம நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம்

இன்னா இப்ப லோக்கலுன்னா நாம கெத்தா உலாத்தணும்

என்ற வரிகளை விவேக் படித்துக்காட்ட ரஹ்மான் இசையமைக்கத் தொடங்குகிறார். அதன்பின் விஜய்யின் குரல் பின்னணியில் ஒலிக்க வீடியோ நிறைவடைகிறது. மேலும், இந்தப் பாடல் இன்று மாலை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் பிகில் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். யோகிபாபு, கதிர், ரெபா மோனிகா ஜான், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

ஞாயிறு 1 செப் 2019