மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

வெளிநாட்டுப் பயணம்: அமைச்சர்களுக்கு எடப்பாடி கட்டளை!

வெளிநாட்டுப் பயணம்: அமைச்சர்களுக்கு எடப்பாடி கட்டளை!

முதல்வரின் அமெரிக்கப் பயணத்தில் இணைவதற்காக அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் ஆகியோர் சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.

முதலீடுகளைக் கவருவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாடுகளுக்கு 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28ஆம் தேதி இங்கிலாந்து சென்ற முதல்வர் அங்கு கிங்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். மேலும், பல நிறுவனங்களையும் பார்வையிட்டுள்ளார். இங்கிலாந்து பயணத்தை நேற்று முடித்துக்கொண்ட முதல்வர், அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். முதல்வரின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகம் திரும்பினார்.

இதனையடுத்து முதல்வரின் அமெரிக்கப் பயணத்தில் இணைந்துகொள்ள பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் நேற்றிரவு (ஆகஸ்ட் 31) சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை அதிமுக நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

புறப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, “நானும் அமைச்சர் உதயகுமாரும் நாளை அமெரிக்காவில் முதல்வருடன் இணைகிறோம். அங்குள்ள கால்நடைத் துறையில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்தும், கால்நடைகள், பால் பண்ணைகளின் செயல்பாடுகளை அறிந்துவரவுள்ளோம். அமெரிக்காவில் சைடெக் நிறுவனத்தின் செயல்பாடுகளை அறிந்து, அங்குள்ள கால்நடைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். தமிழகம் இரண்டாம் வெண்மைப் புரட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்கிறார்கள். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக முடியும். எள்ளி நகையாடியவர்கள் எட்டிப்பார்க்கும் அளவுக்கு முதல்வரின் செயல்பாடுகள் உள்ளது” என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயகுமார், “தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளன. தகவல் தொழில்நுட்பத்தில் சான் பிரான்சிஸ்கோ சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் முதலமைச்சரின் முயற்சி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

முதல்வரின் கட்டளை

இந்த நிலையில் தன்னுடன் வெளிநாட்டுப் பயணத்தில் இணையும் அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஒரு கட்டளை இட்டிருக்கிறார். ‘வெளிநாடுகளில் நாம் பார்வையிடும் நிறுவனங்களில் அங்குள்ள அதிகாரிகள் கேள்விக் கேட்டு நாம் புரியாமல் இருக்கக் கூடாது. அவர்களிடம் அனைத்து தகவல்களையும் கேட்டுப் பெறக் கூடிய வகையில் நம்முடைய கேள்விகள் இருக்க வேண்டும். வெளிநாடு வருவதற்கு முன்பாக உங்களுடைய துறை சார்ந்த அனைத்து விவரங்களையும் தரவாக அறிந்துகொண்டு வாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதனையடுத்து, முதல்வருடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்கள் தங்களது துறைச் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் துறை ரீதியான விவகாரங்கள் குறித்து அலசி ஆராய்ந்து தேர்வுக்குத் தயாராவது போல தயாராகிச் சென்றுள்ளனர்.

துபாய் சுற்றுப்பயணத்தின்போது முதல்வருடன் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இணைந்துகொள்கிறார்.


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019