மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

அசாம் இறுதிப் பட்டியல்: இம்ரான் கான் விமர்சனம்!

அசாம் இறுதிப் பட்டியல்: இம்ரான் கான் விமர்சனம்!

அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு நேற்று (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் சட்டத்திருத்தம் அமலானதைத் தொடர்ந்து இந்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். அமெரிக்கா போன்ற உலக நாடுகளிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் ஆதரவு திரட்டி வருகிறது. ஆனால், அது பாகிஸ்தான் எதிர்பார்க்கும் அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமரச பேச்சுவாரத்தைக்கு முன்வந்தும் மோடி திட்டவட்டமாக இரு நாடுகளுக்கான பிரச்சினை இது என முடித்துக்கொண்டதால் அமெரிக்காவால் மேலும் தலையிட முடியவில்லை. இதனால் செப்டம்பர் மாதம் ஐநாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையைப் பிரதானமாக எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் நியூ யார்க் டைம்ஸுக்கு இம்ரான் கான் அளித்த பேட்டியில், “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த தன்னிச்சையான முடிவை இந்த உலகம் தடுக்காவிட்டால், அணு ஆயுதம் வைத்திருக்கும் இரு நாடுகள் நேரடியாக ராணுவ மோதலுக்குத் தயாராகிவிடும். அதன் விளைவுகள் உலகம் முழுவதிலும் எதிரொலிக்கும்” எனக் கூறினார். இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாமில் தேசிய மக்கள் பதிவேடு அல்லது என்ஆர்சியின் இறுதிப் பட்டியல், நேற்று (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்டது. இந்த இறுதிப் பட்டியலில் 19 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அசாமில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இது குறித்து இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “மோடி அரசின் முஸ்லிம்கள் இன அழிப்பு குறித்து இந்திய, சர்வதேச ஊடகங்கள் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை மணியை ஒலிக்க வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019