மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 செப் 2019

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் - அவல் காரக் கொழுக்கட்டை

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் -  அவல் காரக் கொழுக்கட்டை

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை (செப்டம்பர் 2) உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள், கோயில் நிர்வாகம் சார்பில் பொது இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைத்து பூஜிப்பது வழக்கம்.

சென்னையில் 2,600 விநாயகர் சிலைகளுக்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். 10,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். விநாயகர் சிலைகளை மூன்று நாட்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆறு இடங்களில் கரைக்க போலீசார் அனுமதி அளித்து உள்ளனர்.

விநாயகர் சிலைகள் வழிபாடுகள் முடிந்த பின்னர் வருகிற 5ஆம் தேதி (வியாழக்கிழமை) மற்றும் 7ஆம் தேதி (சனிக்கிழமை), 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய மூன்று தினங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைக்கழக நகர் கடற்கரை ஆகிய ஆறு இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்ல; இந்தியா முழுக்கக் கொண்டாடப்படுபவர் விநாயகர். வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென்னிந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக்கொண்டு ருசி பார்க்கிறார். விநாயகருக்குப் படைக்கப்படும் பலகாரங்களில் கொழுக்கட்டைக்கு முக்கிய இடமுண்டு. கொழுக்கட்டை என்றாலே இனிப்புதானே என்று நினைப்பவர்களின் எண்ணத்தை மாற்றும் இந்த அவல் காரக் கொழுக்கட்டை.

என்ன தேவை?

அவல் - கால் கிலோ

பச்சரிசி மாவு - அரை கிலோ

உப்பு - தேவையான அளவு

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - 3

இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) - சிறிதளவு

துருவிய கேரட் - ஒரு கப்

கடுகு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அவலை தண்ணீரில் நன்றாகக் களைந்து பிழிந்து வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அவல், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட், உப்பு சேர்த்து வதக்கவும். கார பூரணம் ரெடி.

கொதிக்கும் தண்ணீரில் பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் மரக் கரண்டியால் கிளறவும். வெந்ததும் இறக்கி, மாவை கிண்ணம் போல் செய்து, அதில் அவல் பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வேக வைத்து இறக்கிப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: பால் கொழுக்கட்டை


மேலும் படிக்க


ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 1 செப் 2019