மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

ஓ.பன்னீர் நிகழ்ச்சியில் மர்ம ஹெலிகேம்!

ஓ.பன்னீர்  நிகழ்ச்சியில் மர்ம ஹெலிகேம்!

முல்லைப் பெரியாறு பகுதியில் துணை முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஹெலிகேம் பயன்படுத்தப்பட்டது குறித்து கேரளா விளக்கம் கேட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, முதல்போக சாகுபடி மற்றும் குடிநீர்த் தேவைக்காகத் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 29ஆம் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். தேக்கடி ஷட்டர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீரை துணை முதல்வர் திறந்து வைத்தார். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 11,807 ஏக்கர், போடியில் 488 ஏக்கர் என மொத்தம் 14,707 ஏக்கருக்கு நெல்சாகுபடி செய்வதற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தேனி எம்.பி ரவீந்திரநாத் குமாரும் கலந்துகொண்டார். சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இதில் ட்ரோன் எனப்படும் ஹெலிகேம் (பல கோணங்களிலும் படம் பிடிக்க உதவும்) மூலம் நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டது.

துணை முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்ற இடம், பாதுகாக்கப்பட்ட பெரியாறு சரணாலய பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் குறிப்பிட்ட பகுதிக்குள் மேல் ஒளிப்பதிவு செய்யவோ, புகைப்படம் எடுக்கவோ கேரள வனத்துறை மற்றும் காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் துணை முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கேரள வனத்துறையிடம் அனுமதி பெறாமல் ட்ரோன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

எனவே இதுகுறித்து விளக்கம் கேட்டு, சரணாலய இயக்குநர் ஷில்பா குமார் தேக்கடியில் இருக்கும், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசுத் தரப்பில் இந்த நிகழ்ச்சியில் ஹெலிகேம் நாங்கள் பயன்படுத்தவில்லை. எனினும் யார் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து விசாரித்து கேரள வனத்துறைக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இந்நிகழ்ச்சியில் யார் ஹெலிகேம் பயன்படுத்தினார்கள் என்பது மர்மமாக உள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019