மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

வங்கிகள் இணைப்பு: இன்னும் எத்தனை வங்கிகள் மூடப்படும்?

வங்கிகள் இணைப்பு: இன்னும் எத்தனை வங்கிகள் மூடப்படும்?

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை எதிர்கொள்ள மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்படுவதாக அறிவித்தார். அதன்படி இதுவரை இருந்த 27 வங்கிகளின் எண்ணிக்கை இனி 12 வங்கிகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வங்கி ஊழியர்கள் போராட்டம்

சென்னை அயனாவரத்தில் வங்கிகள் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். அதேபோல சென்னை பாரிமுனையில் யூனியன் வங்கி முன் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் இன்று மாலை ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அதிலும் ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கலந்துகொண்டனர். இதுபோல பல்வேறு மாநிலங்களிலும் வங்கி இணைப்புக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நடவடிக்கை வங்கிகளை மட்டுமே நம்பியிருக்கும் கிராமப்புற மக்களை பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கும். கிராமப்புற மக்களின் சேமிப்புகள் சிட் பண்டுகளிடமும் தனியார் நிதி நிறுவனங்களிடமும் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஏற்படும். ஏற்கனவே ஸ்டேட் வங்கியுடன் ஐந்து வங்கிகள் இணைக்கப்பட்டபோது ஆயிரம் வங்கிக் கிளைகள் மூடப்பட்டன. அதேபோல தேனா வங்கியையும் விஜயா வங்கியையும் பரோடா வங்கியோடு இணைத்தபோது 800 வங்கிக் கிளைகள் மூடப்பட்டன. இப்போதையை நடவடிக்கைகள் மூலமாக மேலும் பல்லாயிரம் வங்கிக் கிளைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கியதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா நினைவுகூறப்படும் இந்த ஆண்டில் மீண்டும் மோடி அரசு பொதுத் துறை வங்கிகளை செயலற்றதாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது” என்று விமர்சித்துள்ளார்.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் கூறுகையில், “பல்லாயிரம் கோடி வாரக்கடன்கள் வசூல் செய்வது வங்கிகள் இணைப்பு மூலம் தடைபடும்” என்று குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கிடையே பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “புதிய பொருளாதார கொள்கை அமல்படுத்தப் படாவிட்டால் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு விடை கொடுக்க தயாராகுங்கள். பொருளாதார வீழ்ச்சியை அறிவு அல்லது தைரியத்தால் மட்டுமே காப்பாற்ற முடியாது. அதற்கு இரண்டும் தேவை. ஆனால், இவையிரண்டும் இன்று நம்மிடம் இல்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், ”வங்கிகள் இணைப்பால், ஊழியர்களுக்குப் பணியிழப்பு ஏற்படாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக விளக்கிய பிறகும் போராட்ட அறிவிப்பு ஏன் எனக் கேள்வி எழுப்பி உள்ளார். போராட்டம், போராட்டம் என்றால், எப்படி வளரும் பொருளாதாரம் என வினவியுள்ள அவர், வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும் எனக் கேட்டுள்ளார். பொருளாதார சிரமங்களைச் சரி செய்ய வேண்டாமா? என்றும்” குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019