மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

ஆர்யாவிடமிருந்து முனியை வாங்கிய ‘மகாமுனி’!

ஆர்யாவிடமிருந்து முனியை வாங்கிய ‘மகாமுனி’!

‘மெளனகுரு’ சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள மகாமுனி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

2011ஆம் ஆண்டு வெளியான மெளனகுரு திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சாந்தகுமார். எட்டு வருட இடைவெளிக்குப் பின் ஆர்யாவின் நடிப்பில் தற்போது இவரது இரண்டாவது படமாக மகாமுனி படத்தை இயக்கியிருக்கிறார். இந்துஜா, மஹிமா நம்பியார் நாயகிகளாகவும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் காளி வெங்கட், அருள் தாஸ், ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கின்றனர்.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று(ஆகஸ்ட் 31) காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

மகாமுனி கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், படம் மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத் துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்தப் படத்தின் மொத்தக் குழுவினரும் கடின உழைப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்துஜா

இயக்குநர் சாந்தகுமார் ஒரு தூய்மையான படைப்பாளி. இது வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத ஒரு அனுபவமாகும். ஆர்யாவுடன் நடிப்பது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. மஹிமா ஒரு அழகான க்யூட்டான நடிகை. இந்தப் படத்தில் ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மஹிமா நம்பியார்

இது என்னுடைய கேரியரில் மிகச் சிறந்த கதாப்பாத்திரங்களில் ஒன்று. இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன் ஆர்யா எதைப் பற்றியும்கவலைப்படாத மனிதராகத்தான் எனக்குத் தெரிந்தார். ஆனால் இந்தப் படத்தில் அவருடன் நடித்த பின்பு அவர் ஒரு கடின, அர்ப்பணிப்புத் தன்மையுடன் கூடிய நடிகர்என்பது தெரிந்தது.

ஒரு காட்சியைப் படமாக்கும்போது 10 நிமிடங்களுக்கு முன்பாக நான் தயாராக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ஆர்யா அரை மணி நேரத்திற்கு முன்பாகவேதயாராக நிற்பார்.

ஆர்யா

சாந்தகுமாரிடம் ‘இந்தப் படத்தின் கதையைத் தயார் செய்ய எதுக்கு எட்டு வருஷம் எடுத்துக்கிட்டீங்க?’ என்று கேட்டேன். அதுக்கு அவர் ‘ஞானவேல்ராஜா ஸார்கிட்ட அட்வான்ஸ் வாங்கி அதுல ஒரு பைக் வாங்கினேன்.அந்த பைக்லயே இந்தியாவைச் சுத்திப் பார்க்க போயிட்டேன். இப்போ அடுத்து சைக்கிளும் வாங்கப் போறேன்’னாரு.. ‘ஒரு பைக் வாங்கியே அடுத்தப் படத்தைத் தயார் செய்ய எட்டு வருஷமாச்சுன்னா.. அடுத்து சைக்கிள் வாங்கினா என்னா ஆகும்.. நீங்க அடுத்து பிளைட்டுதான் ஸார் வாங்கணும்’னு சொன்னேன்.

இந்தப் படத்தின் முழுக் கதையையும் சாந்தகுமார் என்னிடம் சொல்லவில்லை. முதலில் ‘மகா’ கதாபாத்திரத்தின் பகுதியை மட்டுமே சொன்னார். பிறகு ‘முனி’ கதாபாத்திரத்தை கடைசியாக உங்களிடமிருந்து வெளிக் கொண்டு வருகிறேன் என்று சொன்னார். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

இயக்குநர் சாந்தகுமார்

இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்யும்போது எனது தனிப்பட்ட வாழ்க்கையும் அதில் கலந்திருக்கிறது. இதனால் எனது மனைவிக்கும், தயாரிப்பாளருக்கும் மட்டும்தான் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தெரியும்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார்கிட்ட அவ்வப்போது ஸ்கிரிப்ட் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொண்டேயிருந்தேன். இந்த நிறுவனத்தை நான் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணம் அது ஞானவேல்ராஜா சாருக்காகத்தான். அவர் எந்தவிதமான அழுத்தத்தையும் எனக்குக் கொடுக்கவில்லை. அவர் என்னிடம் காட்டிய பொறுமையும் புரிதலும் என்னை நெகிழ வைத்தது. எனக்குக் கிடைத்த இந்தக் குழு மிகச் சிறந்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘ஸ்னீக் பீக்’ நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. செப்டம்பர் 6ஆம் தேதி மகாமுனி திரைக்கு வரவிருக்கிறது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019