மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

இணைக்க, பிரிக்க இவ்விடம் அணுகவும்: அப்டேட் குமாரு

இணைக்க, பிரிக்க இவ்விடம் அணுகவும்: அப்டேட் குமாரு

முதல்ல ஆதார் கார்டை இணைச்சாங்க, அப்புறம் பேன் கார்டை இணைச்சாங்க, இப்ப இருக்குற பேங்குகளை எல்லாம் இணைக்கிறாங்க, இந்த நதிகளை எப்ப இணைக்க போறாங்கன்னுதான் தெரியலன்னு புலம்பிகிட்டு இருக்காங்க மக்கள். சூப்பர் ஸ்டாரும் ஆஃப் லைன் போயிட்டாரு. இல்லாட்டி அவர்ட்டயாவது என்ன ஏதுன்னு கேட்கலாம். அவரும் டெஃபெனட்டா ஏதாவது புரியாத மாதிரி சொல்வாரு.

இதுக்குதான் பேசாம இந்தியாவை சீனாவோட இணைச்சிரலாம், அமெரிக்காவோட இணைச்சிரலாம்னு கருத்து சொல்லிகிட்டு இருக்காங்க. அது மட்டுமில்லாம எல்லாத்தையும் இணைக்கிறவங்க காஷ்மீரை மட்டும் ஏன் சார் பிரிச்சீங்கன்னு வேற கேட்கிறாங்க. இதை பிடிச்சு ஏதாவது மீம்ஸ் போடுவாங்கன்னு பார்த்தா நம்ம பயலுக விஜய் மேட்டரை தூக்கிகிட்டு சுத்திகிட்டு இருக்காங்க. அப்டேட்டை பாருங்க, நான் போய் அவங்களை இழுத்துட்டு வாரேன்.

м υ я υ g α η . м

நாமினேஷன்களும், கமல்ஹாசனும், கேமராக்களும் இல்லாமலே நூறு நாட்களையெல்லாம் தாண்டி சிறு சிறு மனஸ்தாபங்களை கடந்து ஒரே வீட்டில் ஒன்றாக உணவருந்தி ஒற்றுமையாய் வாழ்கிறோம்.. இதுவும் ஒரு பிக் ஜாப் தான்..

வெளிநாட்டு_வாழ்க்கை

ஈரோடு இளவரசி

தண்ணியக் குடி, தண்ணியக் குடி..

நிருபர் : நிதி நெருக்கடி, பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை, பொருட்களை வாங்கும் சக்தி குறைவு போன்ற பல்வேறு பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் ?

நிதி அமைச்சர் : யாரேனும் ஒரு செயலாளர் பதிலளிப்பார்கள்..!?

செந்திலின்_கிறுக்கல்கள்

முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தால் பல தாக்கங்கள் ஏற்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு மட்டும் தான் கண்டெண்ட் கிடைச்சிருக்கு சார்!

பரட்டை

டிபன் பாக்ஸ்ல சாப்பிட முடியாத அளவுக்கு சாப்பாடு போட்டு கொடுக்கறது பாசத்தின் வெளிப்பாடுன்னு நம்ம சமுகத்தை யாரோ நம்ப வைச்சிருக்காங்க...

ரஹீம் கஸ்ஸாலி

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது!- அமைச்சர் ஜெயக்குமார்

முருகேசா நான் கேட்டேனா?

amudu

வாட்ஸப்பில் "ஷேர்" என்ற ஒரு வசதி மட்டும் இல்லாமல் போய் இருந்தால், பல வதந்திகள் பரவுவது தடுக்கப்பட்டிருக்கும்.

காளையன்

குழந்தைகள் தாங்கள் கற்ற கராத்தே வித்தைகளை நிகழ்த்திப் பார்க்க உகந்த இடமாக,தங்கள் அப்பாவின் தொந்தியையே முதலில் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஜோக்கர்...

அடேய், நதிநீர் இணைப்போம்னு சொன்னீங்களேடா, கடைசியில பேங்க இணைச்சிட்டு இருக்கீங்களேடா..!!!

உள்ளூராட்டக்காரன்

மாதக்கடைசி + வாரக்கடைசி, ஒரு மோசமான இணை

amudu

ஜூஸ் கடைகள் மட்டும் இல்லாமல் போய் இருந்தால், அழுகிய பல பழங்கள் வீணாக குப்பைத் தொட்டிக்கு போயிருக்கும்.

செந்திலின்_கிறுக்கல்கள்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அழிக்க முடியாது - ஜெயக்குமார்

அவரு ஏன் அழிக்கனும் அதான் நீங்க இருக்கிங்களே ப்ரோ!?

எனக்கொரு டவுட்டு

போன் பேசிக்கொண்டிருக்கும்போது எப்பொழுது போனை கீழே வைப்பார்கள் என்று எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளும் இலவு காத்த கிளிகளே..!

கோழியின் கிறுக்கல்!!

இங்க பாதி பேர் அலாரம் வைக்கிறது அடுத்த நாள் எழுந்திருக்க இல்ல,

அலாரம் வைக்கலைன்னா ராத்திரி தூக்கம் வராதுங்கிறதால தான்!!

அன்புடன் கதிர்

அப்பாவின் சட்டை காலர் அழுக்கை, அர்த்தமுள்ளதாய் மாற்ற வேண்டும் நமது பாக்கெட் மணி !

A.P.Perumal.

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு நாளை முதல் மீண்டும் சேவைக்கட்டணம் அறிமுகம்

ஒண்ணு பண்றீகளா? சம்பளத்தை வாங்கி உங்ககிட்ட தந்துர்றோம். எவ்வளவு எடுக்கனுமோ மொத்தமா எடுத்துட்டு மீதியை தாரீகளா?

ஜால்ரா காக்கா

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என் தம்பி விஜய் தான்~ சீமான்

//அப்போ மூணு படம் எடுத்து.. தமிழ்நாட்டின் நிரந்தர சூப்பர் ஸ்டாரா சிம்புவ ஆக்குவேன் சொன்னது எல்லாம் பொய்யா கோபால் ...பொய்யா

A.P.Perumal.

பாகிஸ்தான திரும்பவும் இந்தியாவோட இணைக்கிறத தவிர மத்த எல்லாத்தையும் இணைச்சாச்சி.

ச ப் பா ணி

எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை

-வங்கிகளின் வருங்கால வாக்குமூலம்

பாலசுப்ரமணி

சிபிஐ: பொருளாதார சரிவுக்கு ஐடியா கொடுத்தா ஜாமீனில் வெளியே விடுகிறோம்

ப.சி: ஜாமீனில் வெளியே விடு அப்பறம் ஐடியா தருகிறேன்.

தட் துப்பாக்கி "கயிற அவுத்து விட்டு அடி" மொமெண்ட்.

வானமே_எல்லை

இந்தியா மிக வேகமாக மாறி வருகிறது! - பிரதமர் மோடி #

எடப்பாடி கோட் போட்டது எல்லாம் மாற்றமா ?

கிப்சன்

லண்டன் கிங்ஸ் மருத்துவமனை இல்லாததால் தான் என்னால் பெரிய டாக்டராக முன்னேற முடியவில்லைனு தமிழிசையக்கா முட்டு குடுக்குமே அத நெனச்சா தான்....

ரமேஷ்.ஏ

பொண்டாட்டிக்கும்,போலீஸ்க்கு ஒரே ஒரு வித்தியாசம் தான்...!!!!,

ரோட்ல ஊதி காட்ட சொன்னா போலீஸ்....,

வீட்ல ஊதி காட்ட சொன்னா பொண்டாட்டி....!!!!

மித்ரன்

இந்தியாவில் ரூ.6.95 கோடி மதிப்பிலான காரை முதல் நபராக வாங்கினார் முகேஷ் அம்பானி - செய்தி #

இந்திய பொருளாதாரம் சரியில்லைனு யாரு சொன்னது..?

ச ப் பா ணி

ஒருத்தன் வீடு கட்ட ஆரம்பிக்கும்போதே அடுத்தவன் வீட்டுச் சோத்தில மண் அள்ளிப்போடுறான்

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019