மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

விஜய் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது: அமைச்சர்

விஜய் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது: அமைச்சர்

விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பான சீமானின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

ரஜினிகாந்துக்கு அடுத்து விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று சென்னையில் நேற்று பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிடார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், நடிகர் விஜயை சீமான் முன்னிலைப்படுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

“விஜயை முன்னிலைப்படுத்துவது சீமானின் கருத்து. ஆனால், எங்களைப் பொறுத்தவரை யார் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது. அப்படிப்பட்ட மாபெரும் இயக்கம்தான் அதிமுக. எம்.ஜி.ஆரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பலரும் ரத்தம் சிந்தி உருவாக்கிய இயக்கம் அதிமுக என்கிற எஃகு கோட்டை” என்று அதற்கு பதிலளித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

மேலும், “எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, 100 நாட்களில் கட்சி முடிவுக்கு வந்துவிடும் என்று கூறினார்கள். ஆனால். 10 வருடங்களுக்கு மேல் ஆட்சியில் இருந்தார். அவர் மறைந்தபோது கட்சி முடிந்துவிட்டது என்று சொன்னார்கள். அப்போதும், ஜெயலலிதா தலைமையில் நான்கு முறை வெற்றிபெற்றோம். தற்போது ஆட்சியில் இருந்துவருகிறோம். இன்னும் 100 வருடங்கள் வரை இது தொடரும். ஆகவே, குப்பன், சுப்பன், ராமன் என எவன் வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. யார் யாரோடு கூட்டணி வைத்தாலும் எங்களை அசைக்க முடியாது. நிரந்தரமாக மக்கள் மனதில் இடம்பெற்றவர்கள் நாங்கள்” என்று தெரிவித்தார்.

செங்கல்பட்டு அருகே பரனூர் கிராமத்தில் அமைந்துள்ள மகேந்திரா சிட்டி தொழிற்பூங்காவில் மரம் நடும் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. அதில், அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தார். பின்னர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019