மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

தோனியை ஒதுக்கவில்லை!

தோனியை ஒதுக்கவில்லை!

தோனியை இந்திய தேர்வுக்குழு ஒதுக்கவில்லை என்று தேர்வுக்குழு உறுப்பினர் கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தில் தான் பங்கேற்கவில்லை என்று ஓய்வு கேட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார் தோனி. ஆனால் ஆகஸ்ட் 15ஆம் தேதி பயிற்சி முடிந்து திரும்பியுள்ளார். இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இதனால் தோனி ஓய்வு அறிவிக்க நிர்பந்திக்கப்படுகிறாரா, தேர்வுக்குழு ஒதுக்குகிறதா என்ற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் தேர்வுக்குழுவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் ஐஏஎன்எஸ் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “தோனியை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்ற கேள்விக்கே இடமில்லை. 2020ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள நிலையில் அடுத்த கட்ட விக்கெட் கீப்பரை தயார்படுத்துவதற்கு எங்களுக்கு அவர் அவகாசம் வழங்கியுள்ளார். மக்களின் கருத்துக்கு முன்பாக அணியின் நலன் தான் முக்கியம் என்பதை உணர்ந்துள்ளார்” என்று தேர்வுக்குழு உறுப்பினர் கூறினார்.

ரிஷப் பந்துக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து பேசிய அவர். “மேலும் குறுகிய வடிவிலான போட்டிகளில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயமடைந்தால் அவருக்கு மாற்று விக்கெட் கீப்பர் உண்மையிலேயே நம்மிடம் இல்லை என்பதையும் பரிசீலித்து அணிக்கு திரும்புவதில் தோனி காலம் தாழ்த்துகிறார். இப்போதைய சூழலில் அவரை புறக்கணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. அதுமட்டுமின்றி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கு முன்பாக அவர் 2 மாத காலம் ஓய்வு கேட்டார். அந்த ஓய்வு காலம் இன்னும் முடிவடையவில்லை. நாங்கள் கணக்கில் சரியாக இருக்கிறோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019